இந்தியாவிலிருந்து மற்றொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற உத்தரவு! 24 மணி நேரம் கெடு விதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தான் வகிக்கும் பொறுப்புக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஒரே வாரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படும் இரண்டாவது அதிகாரி இவர். ஏற்கெனவே கடந்த 13ம் தேதி இதேபோல ஒரு அதிகாரி வெளியேற்றப்பட்டிருந்தார்.

pakistan india Pakistan

இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர், இந்தியாவில் தனது பணிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தார். எனவே அவரை கைது செய்வதாக இந்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே அவர் 24 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும். இது குறித்து தூதர பொறுப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 13ம் தேதி போன்று ஒரு அதிகாரி வெளியேற்றப்பட்டார். அந்த வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், ஒரே வாரத்தில் வெளியேற்றப்படும் இரண்டாவது அதிகாரி வெளியேற்றப்படுகிறார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் ஜோதியின் செல்போனை ஆய்வு செய்தபோது, பாக். அதிகாரிகளுடன் பல விஷயங்களை பகிர்ந்திருப்பதும், இந்த அதிகாரிகள் மூலம் பாக் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரது அனைத்து சோஷியல் மீடியாக அக்கவுன்ட்களும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் என்ன பேசினார் என்பதையெல்லாம் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இந்தியாவின் எல்லை மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது செய்தி ஊடகங்களில் வெளியாவதற்கு முன்னரே, பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ நபர்களுக்கு ஜோதி மூலம் தெரிய வந்திருக்கிறது என்பதும் விசாரணையில் வெளிவந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+