இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த மே மாதம் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது நமது நாட்டில் எரிபொருள் நுகர்வு கடந்த மே மாதத்தில் 6.5% சரிவைக் கண்டுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல், இந்திய சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் நாட்டின் எரிபொருள் தேவையையும் குறைந்துள்ளது.

மத்திய அரசின் கீழ் இயக்கும் PPAC என்ற அமைப்பு இது தொடர்பாக விரிவான ஒரு டேட்டாவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை கடந்த ஆண்டு மே மாதம் 21.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் அது 19.93 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது.

India Fuel Consumption

கடும் சரிவு

குறிப்பாக கேஸ் சிலிண்டர் நுகர்வு 20.5% என்ற அளவில் மிக பெரிய சரிவைச் சந்தித்து 2.13 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது. அதேபோல நாப்தா (Naphtha) தேவை 29.5% சரிந்துள்ளது. சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவே நாப்தா பயன்படுத்தப்படும் நிலையில், கேஸ் நுகர்வு குறைந்ததால் இதன் விற்பனையும் குறைந்துள்ளது.

பெட்ரோல்- டீசல்

பெட்ரோல், டீசல் விற்பனை குறையவில்லை என்ற போதிலும், அதன் வளர்ச்சி மிக குறைவானதாகவே இருக்கிறது. அதாவது பெட்ரோல் விற்பனை 3.3% மற்றும் டீசல் விற்பனை 1.5% என மிகக் குறைந்த அளவிலேயே வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது வழக்கமான வளர்ச்சியை விட மிகக் குறைவு. விமான நிறுவனங்கள் தங்கள் விமானச் சேவைகளைக் குறைத்துக் கொண்டதால், இதன் தேவை 7.83 லட்சம் டன்னாக மாற்றமின்றி உள்ளது.

இந்த எரிபொருள் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் முக்கியக் காரணம் மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலாகும். கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் வெடித்தது. இரு தரப்பும் மாறி மாறி வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தன. இப்போது நேரடி தாக்குதல்கள் குறைந்தவிட்ட போதிலும், முழுமையாக போர் முடிவுக்கு வரவில்லை.

மத்திய கிழக்கு பதற்றம்

அவ்வப்போது தாக்குதல்கள் நடக்கின்றன. இதனால் பதற்றம் தொடரவே செய்கிறது. போரின் விளைவாக, சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பிப்ரவரி இறுதியில் முடக்கப்பட்டது. இதனால் எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களின் இயக்கம் முற்றிலும் நின்றது. தற்போது போக்குவரத்து மெதுவாகத் தொடங்கினாலும், அதன் பாதிப்பு இன்னும் நீடிக்கிறது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு மாதங்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. உலக கச்சா எண்ணெய் சந்தை வரலாற்றில் ஏற்பட்ட மிக பெரிய விநியோகத் தடை என்று சர்வதேச எரிசக்தி முகமை வர்ணித்துள்ளது. இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலரை தாண்டியது. தற்போது கச்சா எண்ணெய் விலை சற்று நிலைபெற்று, ஒரு பேரல் 91.38 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்து என்ன

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்தன.. பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் பெட்ரோல் பங்குகளில் விலை அதிகமாக இருந்ததால், மக்கள் எரிபொருள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டனர். தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 'பல்க் டீசல்' விலையும் உயர்ந்தது நுகர்வைக் கட்டுப்படுத்தியது.

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் ஆகியவை உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதன் நேரடி விளைவை இந்தியா தனது எரிபொருள் நுகர்வு சரிவின் மூலம் உணர்ந்துள்ளது. போர்ச் சூழல் முழுமையாக முடிவுக்கு வந்து, விநியோகச் சங்கிலி சீரானால் மட்டுமே எரிபொருள் சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+