டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் யூ டர்ன் அடிக்கும் கொரோனா.. அதிகரிக்கும் கேஸ்கள்.. இந்தியாவில் புதிதாக 41283 பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறைவதற்கான அறிகுறிகள் பெரிதாக தெரியவில்லை. இன்னும் இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் குறையாமல் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இன்னும் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி வருகிறது.

இந்த இரண்டு மாநிலங்களில் இருந்துதான் இந்தியாவில் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகிய வருகிறது. ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை கேஸ்கள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனா பரவல்.. இந்தோனேசியா, பிரிட்டனில் நிலைமை மோசம்.. உலகம் முழுக்க 40.9 லட்சம் பேர் பலி! கொரோனா பரவல்.. இந்தோனேசியா, பிரிட்டனில் நிலைமை மோசம்.. உலகம் முழுக்க 40.9 லட்சம் பேர் பலி!

எத்தனை

எத்தனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 517 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 31,105,270 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 413,640 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,262,233 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 429,397 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாஷ்டிராவில் 62,05,190 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 8172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,00,429 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 59,74,594 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,26,851 பேர் பலியாகி உள்ளனர்.

 கேரளா

கேரளா

கேரளாவில் இன்னும் கேஸ்கள் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் கேஸ்களில் பெரும்பாலான கேஸ்கள் கேரளாவில் இருந்தே பதிவாகிறது. கேரளாவில் 31,46,981 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 16148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,24,777 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 30,06,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 15269 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா பரவல் கொஞ்சம் குறைந்துள்ளது. கர்நாடகாவில் 28,82,239 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,082 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 28,16,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 36121 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    WHO proposes fresh coronavirus mission to China | OneIndia Tamil
    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 25,33,323 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 2205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,590 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். நேற்று 43 பேர் தமிழ்நாட்டில் பலியானார்கள். 24,71,038 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 33,695 பேர் பலியாகி உள்ளனர்.

    English summary
    India gets 41283 fresh Coronavirus cases: Kerala on the rise again in past 24 hours with 16k+ cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X