டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்து.. எங்கு பெறலாம்-எப்படி பயன்படுத்தனும்.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து 'இன்கோவேக்'-ஐ இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்து வரும் பிப்ரவரி மாதம் சந்தைகளில் கிடைக்கும் என்று தெரிகிறது. மூக்கில் ஸ்பிரே போன்று அடிக்கும் இந்த மருந்தை பயனாளிகள் தாங்களாகவே வாங்கி செலுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த மருந்தின் விலை உள்ளிட்ட மேலும் பல முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஆட்டம் காட்டிய கொரோனா வைரஸ் பெருந்தெற்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், பொதுமுடக்கம் என கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும் இவையெல்லாம் தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்த உதவியதே தவிர.. முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

தடுப்பூசி வந்த பிறகே வைரஸ் பரவலின் வேகமும் அதன் வீரியத்தன்மையும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு முதன் முதலில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாவ்! உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?வாவ்! உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

அடுத்தடுத்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளே பெரும்பாலும் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்துகள் அனைத்தையும் ஊசி மூலம் எடுத்துக்கொள்ள முடியும். நாட்டில் இன்றைய நிலவரப்படி 220.35 கோடி டோஸ் தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு முன்னெச்சரிக்கை அல்லது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அறிமுகம்

தற்போது ஊசி மூலமாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில், நாசி வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த தடுப்பு மருந்துக்கு அண்மையில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், இன்று இந்த தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர். மூக்கு வழியே ஸ்பிரே மாதிரி அடித்துக்கொள்ளக்கூடிய இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் என பெயரிடப்பட்டுள்ளது.

இன்கோவேக் மருந்து எப்போது கிடைக்கும்?

இன்கோவேக் மருந்து எப்போது கிடைக்கும்?

பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சந்தையில் இந்த நாசி வழி தடுப்பு மருந்தான இன்கோவேக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோசாக இதனை பயன்படுத்த முடியும். முதலில் தனியார் மருத்துவமனைகளில்தான் இந்த தடுப்பு மருந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டாலும் 5 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் மருந்தை செலுத்துவதற்கான கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்படும்.

நாட்டின் முதல் தடுப்பு மருந்து

நாட்டின் முதல் தடுப்பு மருந்து

இதனால், தனியார் மருத்துவமனைகளில் இன்கோவேக் மருந்தின் விலை பயனாளிகளுக்கு கிடைக்கும் போது ஆயிரம் ரூபாயை எட்டி விடும் என்று தெரிகிறது. மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.325 க்கு கொடுக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருக்கிறது. இருந்தாலும் தடுப்பு மருந்தின் அவசியத்திற்கு ஏற்ப அரசு கொள்முதல் செய்து ஏழை எளிய மக்கள் பயன்பறும் வகையில் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஊசி இன்றி, வலி இன்றி தடுப்பு மருந்து செலுத்தப்படும் பாரத் பயோடெக்கின் இந்த இன்கோவேக் தடுப்பு மருந்து நாட்டின் முதல் பூஸ்டர் தடுப்பு மருந்து என்ற பெருமையையும் பெறுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

இந்த தடுப்பு மருந்தை மூக்கில் ஸ்ப்ரே செய்வது போல அடித்து பயன்படுத்தலாம். ஊசி எதுவும் தேவைப்படாது. பயனாளிகள் தாங்களாகவே வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். அதுபோக ஊசியின் சிரஞ்ச்சி இன்றி நேரடியாக மூக்கிற்குள் இந்த மருந்தை உள் செலுத்த முடியும். இன்கோவாக் தடுப்பு மருந்து மூக்கின் சளி சுரப்பியில் கொரோனா தொற்று உருவாகும் இடத்தில் இருந்து நோய் எதிர்ப்பு திறனை உருவாக்க கூடியது. 0.1 மில்லி என்ற அளவில் இரண்டு நாசி துவாரங்களிலும் இந்த தடுப்பு மருந்தை செலுத்த முடியும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்

இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்

இது தடுப்பூசி மூலமாக செலுத்தும் மருந்தின் அளவை விட மிகக்குறைந்த மில்லி அளவு ஆகும். தசை மூலமாக செலுத்தப்படும் மருந்தின் அளவு 5 மில்லி செலுத்தப்படுகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு பூஸ்டர் டோஸ் போடாத 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த நாசி வழி தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.

English summary
Bharat Biotech has launched the world's first nasal anti-coronavirus vaccine in India. The drug is expected to be available in the markets in February. It is also said that the users can buy and inject this drug which hits the nose like a spray. Here you can find more important information including price of this medicine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X