பெண் பைலட்கள்.. இந்தியா இப்படி ஒரு சாதனை வச்சிருக்கு.. பெருமையாக சொன்ன மத்திய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பைலட்டுகளில் 15 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்தியாவை ஒப்பிடும்போது பிற உலக நாடுகளில் உள்ள பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் தான் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெருமிதமாக கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதில் பிப்ரவரி 11 வரை நடந்தது. தற்போது 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் 14ல் துவங்கிய இந்த 2வது அமர்வு ஏப்ரல் 8 வரை நடைபெற்று வருகிறது.

இன்று விமான போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதுதொடர்பாக லோக்சபாவில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசினார்

220 புதிய விமான நிலையங்கள்

220 புதிய விமான நிலையங்கள்

அப்போது அவர் விமான போக்குவரத்து துறையின் செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிதாக 33 உள்நாட்டு சரக்கு முனையம் அமைக்கவும், பைலட் பயிற்சிக்காக 15 பயிற்சி பள்ளிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன் பிரிவில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் முடிவு எடுக்கப்பட உள்ளது. 2025 ஆண்டுக்குள் புதிதாக 220 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

உக்ரைனில் மாணவர்கள் மீட்பு

உக்ரைனில் மாணவர்கள் மீட்பு

கடந்த 7 நாள் நிலவரப்படி தினசரி 3.82 லட்சம் பேர் விமான போக்குவரத்தை மேற்கொண்டுள்ளனர். 2018-19 ஆண்டில் 34.5 கோடி பேர் விமான பயணம் செய்த நிலையில் இதை 2023-24ல் 40 கோடியாக உயர்த்த ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரில் இந்தியர்கள் 90 விமானங்களில் மீட்கப்பட்டனர். இந்திய விமானப்படையில் 14 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. இதனால் விமானப்படைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

15 சதவீதம் பெண் பைலட்டுகள்

15 சதவீதம் பெண் பைலட்டுகள்

இந்தியாவில் உள்ள பைலட்டுகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். உலகில் உள்ள பிற நாடுகளில் உள்ள பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதமாக தான் உள்ளது. இது பெண்களுக்கான அதிகாரமளித்தலில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு உதாரணமாகும். இந்தியாவில் சிறப்பு தொழில்நுட்ப உதவியுடன் பைலட் லைசென்ஸ் நடைமுறை எளிதாக்கப்படும்.

விமானத்துறையின் முக்கியத்துவம்

விமானத்துறையின் முக்கியத்துவம்

கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் விமான துறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பெரிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் இருந்தன. தற்போது இந்நிலை முற்றிலும் மாறியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் விமானத்துறையின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+