பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குகிறது.. வரம்பை மீறமாட்டோம்! ஆனால் பதிலடி கொடுப்போம்! ஜெய்சங்கர் வார்னிங்
டெல்லி: "பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி தரும். இந்தியா வரம்பை மீறாது. நிதானமான, பொறுமையான அணுகுமுறைகளை இந்தியா கையாள்கிறது." என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் தினமும் பாகிஸ்தான் இரவு நேரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் "இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம். பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம்" எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவிடம் பேசுகையில், "இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் பொறுப்பானது. அது அப்படியே தொடர்கிறது." எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் அப்பாவிகளை தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா தாக்கி வருகிறது: பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி தரும். இந்தியா வரம்பை மீறாது. நிதானமான, பொறுமையான அணுகுமுறைகளை இந்தியா கையாள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications