சீனாவுக்கு ஆப்பு வைத்த இந்தியா.. டிரம்ப் பாணியில் ஸ்டீல் பொருட்களுக்கு வரியை தீட்டிய மத்திய அரசு
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல்களின் மீது 3 ஆண்டு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து மலிவு விலையில் ஏராளமான ஸ்டீல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் நிலையில் அதனை குறிவைத்து இந்த வரி விதிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேர்வு செய்யப்பட்ட ஸ்டீல் பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி ஸ்டீல் பொருட்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 11-12 சதவீதம் இறக்குமதி வரியை விதித்துள்ளது.

இந்த வரி முதல் ஆண்டில் 12 சதவீதமாகவும் நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு 2வது ஆண்டில் 11.5 சதவீதமாக குறைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். அதன்பிறகு 3வது ஆண்டில் இன்னும் கூடுதலாக குறைத்து 11 சதவீதம் என்ற அளவில் வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் உலகின் 2வது Crude Steel உற்பத்தியாளராக உள்ளது. ஆனால் சீனாவில் இருந்து வரும் மலிவு விலை ஸ்டீல் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
இதன் காரணமாக உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனாவின் இறக்குமதியை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் ஸ்டீல் பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டீல் இறக்குமதிக்கு அதிகப்படியான வரிகளை விதித்தார். இதில் சீனா பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கு மாற்று மார்க்கெட்டை சீனா தேடி வந்தது. அமெரிக்காவுக்கு செல்ல முடியாத ஸ்டீல் ஏற்றுமதியை பிற நாடுகளுக்கு அனுப்பி வந்தது. இப்படியான சூழலில் தான் நம் நாடும் சீனாவின் மலிவு விலை ஸ்டீல் வணிகத்தை குறிவைத்து வரிகளை தீட்டி உள்ளது.
முன்னதாக வியட்நாம் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவில் இருந்து அதிகப்படியான ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் வியட்நாம், தென்கொரியா நாடுகளும் சீனாவின் ஸ்டீல் ஏற்றுமதியை குறைக்கும் வகையில் வரியை விதித்தன. இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு நாடுகளும் சீனாவின் ஸ்டீல் ஏற்றுமதியை குறிவைத்து வரி விதிப்பதால் அந்த நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications