குடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு
டெல்லி: 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசுத் தின விழாவின் போது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தன்று சிறப்பு அழைப்பாளராக யாரை அழைப்பது என இந்திய அரசு முடிவு செய்துவிட்டது.

அதன்படி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சிறப்பு அழைப்பாளராக இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, போரிஸுக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார்.
அப்போது தொழில் முதலீடு, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்பு தருவது குறித்து பேசப்பட்டது. இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
அதே போல் பிரிட்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு போரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். 1993-ஆம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்புக்காக பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications