இன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு!
Recommended Video

டெல்லி: இந்திய விமானப்படை பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் என்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்க முயன்றது. இதனால் பெரிய அளவில் போர் பதற்றம் நிலவி வந்தது.

போர் இல்லை
பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலை தொடர்ந்து இந்த போர் பதற்றம் மொத்தமாக தணிந்தது.இந்த தாக்குதல்கள் குறித்தும் இப்போதும் நிறைய கேள்விகளும், மர்மங்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்ச
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாக புகார் அளித்து இருக்கிறார். இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும். எங்கள் உளவுத்துறை தகவல்கள் அப்படித்தான் தெரிவிக்கிறது.

எப்போது தாக்குதல்
பெரும்பாலும் ஏப்ரல் 16-20க்குள் இந்த தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கு இதுகுறித்து உறுதியான தகவல்கள் வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தேர்தல் நேரம்
இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு தாக்குதல் நடக்குமா என்பது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications