டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Abhinandhan: உலக நாடுகளிடம் முறையிட்ட இந்தியா.. வேறு வழியின்றி அபிநந்தனை விடுவிக்க பாக். ஒப்புதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அபிநந்தனை மீட்க இந்தியா இதை தான் செய்யப் போகிறது- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள அபிநந்தனை மீட்பதற்காக ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வந்த நிலையில் உலக நாடுகளின் அழுத்தத்தால் அபிநந்தனை நாளை விடுவிக்க போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது பாகிஸ்தான் விமானம் சுட்டதில் இந்திய மிக் 21 ரக விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. அதிலிருந்த விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர்.

    India is taking diplomatic steps to get back Abhinandhan

    இந்த நிலையில் அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

    [Read more: அபிநந்தன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் வர வேண்டும்.. தந்தை வர்த்தமான் பிரார்த்தனை ]

    இந்த நிலையில் அபிநந்தனை உடனே ஒப்படைக்க பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. மேலும் அபிநந்தனை ராஜாங்க ரீதியில் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வந்த நிலையில் அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகும்.

    English summary
    India is taking diplomatic steps to retrieve Wing Commander Abhinandhan from Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X