டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையோரத்தில் ஏவுகணைகள்.. சீனாவை 'குளோஸாக' கண்காணிக்கும் இந்திய ராணுவம்.. லடாக்கில் நடப்பது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக் அருகே அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுக்கு அருகில் சீனாவால் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வரும் ஏவுகணை பேட்டரி அமைப்புகளை இந்திய பாதுகாப்பு அமைப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Recommended Video

    LAC-யில் China நிறுத்தி வைத்திருக்கும் Air Missile Batteries | Oneindia Tamil

    சீன மக்கள் விடுதலை இராணுவம் கிழக்கு லடாக்கில் தொடர்ந்து நிலவும் பதட்டங்களை கருத்தில் கொண்டு இந்திய எல்லைக்கு அருகில் ஹெச்.யூ- மற்றும் ஹெச்.யூ 22 உள்ளிட்ட விமான ஏவுகணைகளை அனுப்பி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக பதற்றம் நீடிக்கிறது. இரு நாடுகளும் வீரர்களை அதிக அளவில் குவித்துள்ளன. தற்போது பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் படைகள் விலக்கல் தொடர்கிறது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 10வது சுற்று பேச்சின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன. இதன் மூலம் அங்கு பதற்றம் குறைந்துள்ளது.

    எந்த பகுதிகள்

    எந்த பகுதிகள்

    இருநாட்டு அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களில் இருந்து படைகளை விலக்குவது குறித்து இரு தரப்பும் அண்மையில் விவாதித்தன.

    சில இடங்கள்

    சில இடங்கள்

    ஆனால் பேச்சுவார்த்தையில், டெக்ஷோக்கிற்கு அருகிலுள்ள கோக்ரா ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்ஸ், டெப்சாங் சமவெளி மற்றும் சி.என்.என் சந்தி ஆகியவற்றில் மீதமுள்ள முக்கிய பாய்ண்டுகளில் படைகளை வெளியேற்றுவதற்கு சீன தரப்பு தயக்கம் காட்டி வருகிறது. ஆனால் படைகளை எப்படியாவது விலக்க வைக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஏவுகணைகள் நிறுத்தம்

    ஏவுகணைகள் நிறுத்தம்

    இது ஒருபுறம் எனில் சீனா படைகளை வாபஸ் பெற தயக்கம் காட்டும் பகுதிகளில் ஹெச்.யூ- மற்றும் ஹெச்.யூ 22 உள்ளிட்ட விமான ஏவுகணைகளை அனுப்பி வருகிறது. HQ-9 என்பது ரஷ்ய S-300 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் தலைகீழ்-வடிவமைக்கப்பட்ட பதிப்பாகும், மேலும் இதன் மூலம் 250 கிலோமீட்டர் தூரத்தில் இலக்குகளை கண்காணித்து தாக்க முடியும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின. "சீனர்களால் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள பிற ஆயுதங்கள் அமைப்பை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏற்ற இறக்கம்

    ஏற்ற இறக்கம்

    இதற்கிடையே கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள் ஹோடன் மற்றும் காஷ்கர் விமானநிலையங்களில் போர் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் அந்த எண்ணிக்கை அவ்வப்போது ஏற்ற இறக்கமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    The Chinese People's Liberation Army has continued the deployment of surface to air missiles including the HQ- and HQ 22 close to the Indian territory in view of the ongoing tensions, government sources told ANI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X