கொடூரம்.. இந்தியாவில் தினமும் 86 பெண்கள் பலாத்காரம்.. தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல்
டெல்லி: இந்தியாவில் தினமும் 86 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், ஒரு மணிநேரத்தில் பெண்களுக்கு எதிராக 49 குற்றங்கள் பதிவாகி வருகின்றன என தேசிய குற்றஆவண காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) உள்ளது. இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 2021ல் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

31,677 பலாத்கார வழக்குகள்
இந்தியாவில் கடந்த 2021ல் 31 ஆயிரத்து 677 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது அதிகமாகும். அதேநேரத்தில் 2019ம் ஆண்டை காட்டிலும் குறைவாகும். அதாவது 2020ல் 28,046 பலாத்கார வழக்குகளும், 2019ல் 32,033 பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

ராஜஸ்தானில் அதிகம்
இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் மட்டும் 2021ம் ஆண்டில் 6,337பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. அதன்பிறகு 2வது இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. இங்கு 2,947 பலாத்கார சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 2,845 பலாத்கார வழக்குகளுடன் உத்தர பிரதேசம் 3வது இடத்திலும், 2,496 பலாத்கார வழக்குகளுடன் மகாராஷ்டிரா 4வது இடத்திலும் உள்ளது. தலைநகர் டெல்லயில் 1,250 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின.

தினசரி 86 பலாத்கார வழக்குகள்
இந்தியா முழுவதும் மொத்தம் 31,677 பலாத்கார வழக்குகள் பதிவானதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒரு நாளைக்கு 86 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். பாலியல் பலாத்கார குற்றத்துக்கான சதவீதத்தை ஒரு லட்சம் பேரின் அடிப்படையில் பார்த்தால் ராஜஸ்தானில் அதிகபட்சம் 16.4 சதவீதமாக உள்ளது. சண்டிகரில் 13.3 சதவீதமாகவும், டெல்லியில் 12.9 சதவீதமாகவும் உள்ளது. இந்தியஅளவில் சராசரி என்பது 4.80 சதவீதம் என உள்ளது.

ஒரு மணிநேரத்தில் 49 வழக்குகள்
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்தால் 2021ம் ஆண்டில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ம் ஆண்டில் 3,71,503 வழக்காகவும், 2019ம் ஆண்டில் 4,05,326 ஆகவும் இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் மட்டும் ஒரு மணிரேத்தில் பெண்களுக்கு எதிராக 49 வழக்குகள் பதிவாகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது பாலியல் பலாத்காரம், கடத்தல், கொலை, வரதட்சணை, கட்டாய திருமணம் உள்பட பல்வேறு வழக்குகள் சார்ந்தவையாகும்.

உத்தர பிரதேசம் முதலிடம்
பெண்களுக்கு எதிராக பதிவான மொத்த வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2021ல் மட்டும் உத்தர பிரதேசத்தில் 56,083 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 40,738 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 39,526, மேற்கு வங்கத்தில் 35,884, ஒடிசாவில் 31,352 வழக்குகளும் பதிவாகியுள்ளன என என்சிஆர்பி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications