டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அபாயம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Recommended Video

    சீனாவால் உலகத்துக்கே பெரும் சேதம் - கொந்தளித்த Donald Trump

    அமெரிக்காவின் Massachusetts Institute of Technology இது தொடர்பாக நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

    கொரோனாவின் கோர முகம்.. புதிய ஹாட்ஸ்பாட்டுகளாகும் கர்நாடகா, தெலுங்கனா கொரோனாவின் கோர முகம்.. புதிய ஹாட்ஸ்பாட்டுகளாகும் கர்நாடகா, தெலுங்கனா

    மோசமான பாதிப்பில் இந்தியா

    மோசமான பாதிப்பில் இந்தியா

    தற்போதைய பரிசோதனைகள் நிலவரம், ஜூலை 1 முதல் பரிசோதனைகளை அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்காமல் போனால் உலகிலேயே இந்தியாதான் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நாடாக இருக்கும்.

    ஒருநாள் பாதிப்பு 2.87 லட்சம்

    ஒருநாள் பாதிப்பு 2.87 லட்சம்

    84 நாடுகளின் கொரோனா பாதிப்பு விவரங்களை ஆய்வு செய்ததில் இம்முடிவு தெரியவந்துள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 2.87 லட்சமாக இருக்கும். 2021-ம் ஆண்டு மார்ச்- மே மாத காலகட்டங்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 20 கோடி முதல் 60 கோடி வரை உயரக் கூடும்.

    அமெரிக்கா, ஆப்பிரிக்காவில்..

    அமெரிக்கா, ஆப்பிரிக்காவில்..

    2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 95,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும். தென்னாப்பிரிக்காவில் நாள் ஒன்றுக்கு 21,000; ஈரானில் 17,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலை உருவாகும். 2021-ல் தற்போதைய நிலைமையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் 84 நாடுகளில் கொரோனா பாதிப்பு 155 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இந்த நாடுகள் நாள் ஒன்றுக்கு 0.1% என்ற அளவில் பரிசோதனைகளை அதிகரித்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 137 கோடியாக இருக்கும்.

    கணிப்புகள் பொய்யாகவில்லை

    கணிப்புகள் பொய்யாகவில்லை

    மேலும் ஜூன் 18-ந் தேதியன்று உலக அளவில் கொரோனா பாதிப்பு 8.85 கோடியாகவும் கொரோனா மரணங்கள் 6 லட்சமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 11.8 கோடியாக இருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Massachusetts Institute of Technology have predicted that India might record 2.87 lakh coronavirus cases per day by Feb 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X