"இந்து" என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது.. இந்தியா இந்து நாடாக அறிவித்ததே இல்லை – உச்சநீதிமன்ற நீதிபதி
டெல்லி: ''அரசியலமைப்பு ரீதியாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சிந்து நதிக்கு அப்பால் வசித்தவர்களை குறிக்க வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான சொல் தான் 'இந்து'. இந்து என்பதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை. இந்தியா தன்னை ஒருபோதும் இந்து நாடாக அறிவித்து கொண்டதில்லை'' என்று உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழக மாணவர் வழக்கறிஞர் சங்கத்தின் (NLIU-SBA) 2026 மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி என் கோடீஸ்வர சிங், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிஹரி உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.
அப்போது இந்தியாவை ஒரு மத அடையாளத்துக்குள் அடக்கிவிட முடியாது. இந்தியா ஒருபோதும் இந்து நாடாக அறிவித்தது இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர சிங் பேசினார். இதுபற்றி கோடீஸ்வர சிங் கூறியதாவது:
வழிகாட்டும் அரசியல் சாசனம்
''இந்தியாவின் சுதந்திரத்திற்கான தொலைநோக்கு பார்வை, லட்சியங்களை வகுத்து எதிர்காலத்துக்கு தொடர்ந்து வழிகாட்டும் ஆவணம் தான் அரசியல் சாசனம். நம்மிடம் மிக ஆக்கப்பூர்வமான சட்ட ஆவணம் உள்ளது. இது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல. இது ஒரு வரலாற்று ஆவணம். ஒரு சமூக ஆவணம். இது ஒரு ஆக்கப்பூர்வமான ஆவணம்.
இந்திய சட்ட அமைப்பில் மேற்கத்திய தாக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் . ஏனென்றால் மேற்கத்திய சட்டக் கல்வி முறை இந்தியாவின் சமகாலச் சூழ்நிலைகள் அனைத்தையும் கையாள முடியாது. இந்திய சட்ட அமைப்பு நம்முடைய சமூக எதார்த்தங்களுக்கு ஏற்றவாறு சட்ட முறை செயல்பட வேண்டும்.
பிராந்திய மொழிகளில் சட்டம்
மொழி தடைகள் மற்றும் சிக்கலான சட்ட சொற்களால் மக்களுக்கும், சட்டத்துறைக்கும் இடையோன தொடர்பு குறைந்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த மொழியில் வழக்காட விரும்புகிறார். இதனால் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இது அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்தும்.
இந்து நாடாக அறிவித்தது இல்லை
அரசியலமைப்பு ரீதியாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவை ஒரு மத அடையாளத்திற்குள் அடக்கிவிட முடியாது. இந்தியாவை போல் அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாடுகள் மிகச்சிலவே உள்ளன. இந்தியா தன்னை ஒருபோதும் இந்து நாடாக அறிவித்து கொண்டதில்லை. சிந்து நதிக்கு அப்பால் வசித்தவர்களை குறிக்க வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான சொல் தான் 'இந்து'. அதன் பின்னணியில் வேறு அர்த்தம் இல்லை'' என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications