டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்கவே மாட்டோம்.. உலகத்துக்கே பாடம்! மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்த ராஜ்நாத், அமித்ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: 14 ஆண்டுகளுக்கு முன் உலகையே உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நாளான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கடல் வழியே மும்பை மாநகருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுமார் 150 பேர் இன்னுயிரை இழந்தன.

இந்திய வரலாற்றின் கருப்பு தினமாக படிந்துபோன இந்த கோர சம்பவம் நடந்து இன்றோடு 14 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதனை ஒட்டி பயங்கரவாதத்திற்கு எதிராக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பயங்கரவாத தாக்குதல்

பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், லியோ போல்டு கபே, ஓபராய் டிரைடெண்ட், நாரிமன் இல்லம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

இதுகுறித்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பாதுகாப்பு பணியின்போது வீரத்துடன் போராடி உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த நாடு மரியாதை செலுத்துகிறது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்பிற்கு உரியவர்களை விட்டு விலகாத வலியை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

அமித்ஷா

அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது பற்றி தெரிவிக்கையில், "26/11 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவிக்கிறேன். பயங்கரவாதிகளுடனான சண்டையின்போது தீரத்துடன் போராடி உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களை நினைத்து அவர்களை வணங்குகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற பாடத்தை இந்த நாள் உலகிற்கு கற்பித்தது." என பதிவிட்டு உள்ளார்.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைத்து வணங்குகிறேன். இந்த தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து போராடியபோது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு என் அஞ்சலி. இந்த நாடு 26/11 சம்பவத்தை மறக்கவில்லை. என்றும் மறக்காது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜெய்ஷங்கர்

ஜெய்ஷங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் மும்பை தாஜ் ஹோட்டலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய நினைவுக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டி 2 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்

சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்

அதில் பேசிய அவர், "பயங்கரவாதம் என்பது மனித நேயத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது. 26/11 ஆன இன்று தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்தியாவுடன் இவ்வுலகமும் இணைந்து இருக்கிறது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள், திட்டமிட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உலகம் எங்கும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம்." என்றார்.

English summary
President Draupadi Murmu and many Union Ministers are condoling the victims of the Mumbai terror attack that shook the world 14 years ago today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X