வரலாற்றில் முதல்முறை.. இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.. சுகாதாரத்துறை சர்வே!
டெல்லி: இந்தியாவில் தற்போது 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் நடைபெற்ற மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறையின் தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வே (National Family and Health Survey - NFHS) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2019 -2021 என்ற மூன்று வருடங்களில் இரண்டு கட்டமாக இந்த சர்வதேச நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரண்டாம் கட்ட சர்வே முடிவுகள் எடுக்கப்பட்டன.
மொத்தம் 22 மாநிலங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. 650,000 பேரிடம் 707 மாவட்டங்களில் மொத்தமாக சர்வே இரண்டு கட்டமாக எடுக்கப்பட்டது. முதல் கட்டத்தில் 10 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

எப்படி
அதன்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சிறிய அளவிலான சாம்பிள் சர்வே. மொத்த இந்தியாவின் இறுதி மக்கள் தொகை விவரம் கிடையாது. மொத்தமாக தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் போது எத்தனை ஆண்களுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.

பெண்கள்
ஆனால் இப்போது வெளியாகி இருக்கும் இந்த தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வே முடிவுகள் பல கிட்டத்தட்ட இந்தியாவின் மக்கள் தொகை குறித்த ஒரு இமேஜை கொடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவை இனியும் பெண்கள் குறைவான நாடு என்று அமர்த்தியா சென் வர்ணித்தது போல வர்ணிக்க முடியாது.

1990
1990களில் இந்தியாவில் 1000கும் 927 பெண்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின் 2005-06 சர்வேயில் இந்தியாவில் 1000: 1000 என்ற அளவில் பெண்கள் இருந்தனர். 2015-16 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வேயில் இந்தியாவில் 1000க்கும் 991 பெண்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வேயில் முதல்முறையாக இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதனை
தேசிய அளவில் நடத்தப்படும் பெரிய சர்வேயில்தான் உண்மையான புள்ளி விவரம் தெரியும் என்றாலும் கூட இப்போது தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வே மூலம் இந்தியாவில் பெண்கள் எண்ணிக்கை ஆண்களை விட உயர்ந்துள்ளது உறுதியாகி உள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு மீதான கண்ணோட்டம் மாறி உள்ளது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் இந்தியாவில் கடந்த 5 வருடமாக பிறக்கும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை.

5 வருடம்
கடந்த 5 வருடமாக இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 929 பெண்களே பிறந்து உள்ளனர். அதற்கு முன் பிறந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை காரணமாகவே சர்வேயில் அதிக பெண்கள் இருப்பது உறுதி செய்யயப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தியாவில் ஆண்களின் வாழ்நாள் 66.4 சதவிகிதமாகவும், பெண்களின் வாழ்நாள் 69.6 சதவிகிதமாகவும் உள்ளது இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

குழந்தைகள்
இந்த சர்வேயின்படி இந்தியாவில் இப்போது 26.5% பேர் 15 வயதுக்கு குறைந்தவர்கள். 10 வருடத்திற்கு முன் இது 34.9% ஆகி இருந்தது. இதனால் இந்தியா இனியும் மிகவும் இளமையான நாடு கிடையாது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வடஇந்தியாவை காட்டிலும் தென்னிந்தியாவில் வயது குறைவானவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications