சீனாவின் கண்ணில் மண்ணை தூவி.. Leh-வில் இந்தியா அமைத்த 280 கிமீ சாலை.. யாராலும் கண்டுபிடிக்க முடியாது
லடாக்: லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது லடாக் அருகே இந்தியா ரகசிய சாலை ஒன்றை அமைத்துள்ளது.
லடாக்: லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது லடாக் அருகே இந்தியா ரகசிய சாலை ஒன்றை அமைத்துள்ளது. இந்த சாலையில் என்ன வாகனங்கள் செல்கிறது, எப்படி போக்குவரத்து உள்ளது, ராணுவம் செல்கிறதா என்று எதையும் சீனாவால் கண்டுபிடிக்க முடியாது... அந்த அளவிற்கு பாதுகாப்பாக, ரகசியமாக இந்த சாலையை அமைத்து உள்ளனர்.
Recommended Video
லடாக் - காஷ்மீர் இடையே போக்குவரத்தை ஏற்படுத்துவதும், ராணுவம் எளிதாக செல்லவும் வசதியாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. நிறைய மலைகள் இருப்பதால், அதை குடைந்து சாலைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக உருவாக்கப்பட்டதுதான் பிஆர்ஓ எனப்படும் எல்லை சாலை அமைப்பு (Border Roads Organisation (-BRO). தற்போது இந்த பிஆர்ஓ மூலம் எல்லையில் ரகசிய சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மணாலி - லே பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சாலை எப்படி
இந்த சாலைக்கு நிம்மு - பதாம் - டார்சா ( Nimmu-Padam-Darcha -NPD) சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் சிறப்பு என்னவென்றால் இதை எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது. அதாவது இங்கு ராணுவ படைகள் சென்றால், இந்த சாலை வழியாக ராணுவம் இடமாற்றம் செய்யப்பட்டால் அதை எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது. சீனாவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு. லே பகுதியில் படைகளை குவிக்க வேண்டும் என்றால், இந்த சாலை வழியாக படைகளை அனுப்பலாம்.

ஏன் இப்படி
இந்த சாலைகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்த சாலையின் எந்த பகுதியும் சீனாவின் எல்லைக்கு அருகில் இல்லை. பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலும் இந்த சாலை இல்லை. இதனால் இரண்டு நாட்டு ராணுவ வீரர்கள் மூலம் இந்த சாலையை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல் அவர்களின் உளவு டிரோன் விமானங்கள் மூலமும் போக்குவரத்தை கண்டுபிடிக்க முடியாது.

மற்ற சாலைகள்
இதற்கு முன் ஸ்ரீநகர் - கார்கில் - லே இதேபோல் சாலை உள்ளது. இன்னொரு பக்கம் மணாலி சர்சா பகுதியிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு சாலைகளும் எல்லைக்கு அருகில் இருக்கிறது. இரண்டு சாலைகளும் சீனாவின் எல்லைக்கு அருகில் இருக்கிறது. இதனால் இந்த சாலைகளில் இந்திய ராணுவம் பயணம் மேற்கொண்டால் சீனாவால் கண்டுபிடிக்க முடியும்.

சீனாவிற்கு தெரியாமல் பயணம்
இந்த நிலையில்தான் சீனாவிற்கு தெரியாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக இந்த நிம்மு - பதாம் - டார்சா ( Nimmu-Padam-Darcha -NPD) சாலை அமைக்கப்பட்டுள்ளது. 90% இந்த சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த சாலை திறக்கப்பட்டுள்ளது. முன்பு மணாலி - லே செல்ல 14 மணி நேரம் ஆகும் நிலையில் தற்போது இந்த சாலை மூலம் 6 மணி நேரம் ஆகும் மிக எளிதாக இதில் இனி பயணிக்க முடியும்.

எல்லா காலத்திலும்
பொதுவாக ஸ்ரீநகர் - கார்கில் - லே மற்றும் மணாலி சர்சா சாலைகள் வருடத்தில் எல்லா நாளும் இயங்காது. 6-7 மாதங்கள் மட்டுமே இந்த சாலையில் பயணம் செய்ய முடியும். மற்ற நாட்களில் இந்த சாலைகள் மொத்தமாக பனி மூலம் மொத்தமாக மூடப்படும். ஆனால் இந்த நிம்மு - பதாம் - டார்சா ( Nimmu-Padam-Darcha -NPD) சாலை அனைத்து கால நிலையிலும் இயங்கும் திறன் கொண்டது. பனி மூலம் இந்த சாலைகள் மூடப்படாது.

மொத்தம் எவ்வளவு
இந்த சாலை மொத்தம் 280 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மணாலி - லே இடையே எளிதாக பயணம் மேற்கொள்ள முடியும். மணாலி - கார்கில் இடையே இதுவரை 700 கிமீ தூரமாக இருந்த பயணம் 522 கிமீ தூரமாக குறைந்துள்ளது. இந்த சாலை மூலம் லடாக்கில் போர் வரும் பட்சத்தில் எல்லையில் படைகளை குவிக்க வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications