அவசரமாக நேவிகேஷன் சிஸ்டத்தை மாற்றும் இந்தியா! உலகம் முழுவதும் பறந்த அலர்ட்! பெரிய சிக்கல்!
டெல்லி: உலகின் காந்த வட துருவம் ரஷ்யாவை நோக்கி நகர்வதால், இந்தியா உட்பட மொத்த உலக நாடுகளும் அவசர அவசரமாக தங்கள் நேவிகேஷன் சிஸ்டத்தை மாற்றியமைக்க தொடங்கியுள்ளன. இதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டாலும் மொத்த உலகமும் காலி என்று விஞ்ஞானிகள் வார்னிங் கொடுத்திருக்கின்றனர்.
வடக்கு திசை நம் எல்லோருக்கும் தெரியும். சூரியன் உதிக்கும் பக்கம் நின்று பார்த்தால் இடது கை பக்கம் இருக்கும் திசைதான் வடக்கு. ஆனால் விமானங்களில் போகும் போது.. கப்பலில் போகும்போது.. திசையை கண்டுபிடிப்பது நூடுல்ஸை தனித்தனியாக பிரித்து எடுப்பதை விட கஷ்டம். இந்த பிரச்சனையை சரி செய்யதான் காந்த ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சிவப்பு கலர் முள் எந்த திசையை காட்டுகிறதோ அதுதான் வடக்கு.

வடக்கு திசை பஞ்சாயத்து
ஆனால் பிரச்சனை இன்னும் முடியவில்லை. இந்த காந்த முள், பூமியின் காந்தபுலத்தை வைத்து வேலை செய்கிறது. அதாவது நாம் நின்றுக்கொண்டிருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு சுமார் 3,000 கி.மீ ஆழத்திற்கு போனால் அங்கு நெருப்பு குழம்பு இருக்கும். இரும்பு, நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள்தான் உருகி நெருப்பு குழம்பாக இருக்கிறது. இதுதான் நம்முடைய காந்த முள்ளை கரெக்டாக வடக்கு திசையை நோக்கி காட்ட வைக்கிறது.
இங்கும் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்த நெருப்பு குழம்பு தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதால், வடக்கு திசையை மாறிக்கொண்டே இருக்கும். இப்போது இதுதான் நடந்திருக்கிறது.
ஷாக்கான விஞ்ஞானிகள்
நேற்று வரை கனடாதான் வடக்கு என்று காந்த முள் காட்டிக்கொண்டிருந்தது. ஆனால், இந்து ரஷ்யாவின் சைபீரியாவை வடக்கு என்று முள் காட்டுகிறது. டவுட்டாக இருந்தால் காந்த முள் வைத்து செக் செய்து பாருங்கள். இந்தியாவில் இந்த வித்தியாசம் தெரியாது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த வித்தியாசம் நன்றாகவே தெரியும்.
உஷாரான இந்தியா
இந்த மாற்றம், மேலே சொன்னதை போல விமானம், கப்பல், நீர்மூழ்கி கப்பல்களில் திசையை கண்டறிவதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். எனவேதான் World Magnetic Model - உலக காந்த மாதிரியை உலக நாடுகள் பயன்படுத்துகின்றன. இது சரியாக வடக்கு திசையை காட்டும். இருப்பினம் தற்போது காந்த புலம் சைபிரியாவை நோக்கி நகர்ந்திருப்பதால், இந்த World Magnetic Model-ல் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
பெரிய சிக்கல்
இந்தியா உட்பட உலக நாடுகள் தற்போது இந்த வேலையை அவசர அவசரமாக செய்து வருகின்றன. இல்லையெனில் திசை தெரியாமல் விமானங்களும், கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வானத்தில், கடலில் நீண்ட தூர பயணம் செய்யும்போது 1 டிகிரி கோணம் தவறாக காட்டினாலும், நாம் நிச்சயம் தவறான இடத்திற்கு சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையில 1 என்கிற நம்பர் முக்கியம் மக்களே!
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
கண்களுக்கு விருந்து.. நெருக்கமாக வரும் வியாழன் மற்றும் வெள்ளி! மிஸ் பண்ணாதீங்க -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications