7 நாள் டைம்.. 50% பணியாளர்களை உடனே திரும்ப பெறுங்கள்.. பாக்.கிற்கு இந்தியா அதிரடி செக்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 50% பேரை உடனடியாக அந்த நாடு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகளும் 50% பேர் திரும்ப பெறப்படுகிறார்கள்.

Recommended Video

    50% பணியாளர்களை உடனே திரும்ப பெறுங்கள்! Pakistan-க்கு India உத்தரவு

    கடந்த மே மாதம் இறுதியில் இந்தியாவில் உளவு வேலைகளை செய்து வந்ததாக கூறி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு உயர் கமிஷ்னர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் உயர் கமிஷனில் இவர்கள் இருவரும் விசா பிரிவில் பணியாற்றி உள்ளனர். இவர்களின் பெயர்கள் அபீத் ஹுசைன் மற்றும் தாஹீர் கான் ஆகும்.

    இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த இரண்டு வெளியுறவுத்துறை தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் பாகிஸ்தானில் கைது செய்தது. சாலையில் வாகன விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்த போலீஸ், பின் மத்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாக விடுதலை செய்தது.

    பெரிய விரிசல்

    பெரிய விரிசல்

    இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக இரண்டு நாட்டு உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 50% பேரை உடனடியாக அந்த நாடு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகளும் 50% பேர் திரும்ப பெறப்படுகிறார்கள். 7 நாட்களுக்குள் அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது.

    உளவு வேலை

    உளவு வேலை

    இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என்ற போர்வையில் உள்ளே வருகிறார்கள். ஆனால் இந்தியாவிற்குள் வந்த பின் அவர்கள் உளவு வேலைகளை செய்கிறார்கள். தொடர்ந்து உளவு வேலைகளை செய்வது, இந்தியாவிற்கு எதிராக செயல்படுவது, தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவது என்று பணிகளை செய்கிறார்கள்.

    ஒப்பந்த மீறல்

    ஒப்பந்த மீறல்

    வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிராக இவர்கள் இந்த பணிகளை செய்கிறார்கள். இரண்டு நாட்டு உறவுக்கு இது எதிரானது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் இப்படி செயல்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு பாகிஸ்தான் தூதரக பணியாளர்கள் 50% திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பாகிஸ்தானில் இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    பொய்யான புகார்

    பொய்யான புகார்

    பொய்யான புகாரை விதித்து அவர்களை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களை மோசமாக தாக்கி அதன்பின் விடுதலை செய்துள்ளனர்.இதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பை காட்டும் விதமாகவும், தீவிரவாத செயல்களை தடுக்கும் பொருட்டும் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 50% பேரை உடனடியாக திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளோம், என்று கூறியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+