அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்!
டெல்லி: அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலை பெற்றுள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்குதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் ரொம்பவும் முக்கியம். இந்தியாவை சுற்றியிருக்கும் சீனா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இப்படி இருக்கையில், இந்தியாவும் தனது ஆயுதங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் தனது ஆயுத எண்ணிக்கையை தற்போது 172-ஆக இந்தியா உயர்த்தியிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்
கடந்த ஆண்டு வரை அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தான் (170) இந்தியாவை விட சற்று முன்னிலையில் இருந்தது. ஆனால், 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா 172 அணு ஆயுதங்களுடன் பாகிஸ்தானை முந்தியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது அணு ஆயுத பலத்தை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 410-ஆக இருந்த சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை, தற்போது 500-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுமே தங்களது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருவதாகவும், புதிய வகை ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியா தற்போது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, சீனா முழுவதையும் இலக்கு வைக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது.
ஒட்டுமொத்தமாக உலகில் ஒன்பது நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல்) அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மட்டுமே உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.
உக்ரைன் போர் மற்றும் காசா போர் போன்ற உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், நாடுகள் தங்களது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா தனது தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதில் தொடர்ந்து முன்னேறி வருவதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications