டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசிலை கொரோனா தொற்று இந்தியாவில வேகமாக பரவி வருவதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரேசிலை விட மிக வேகமாக 20 லட்சம் நோயாளிகளை இந்தியா எட்டியிருக்கிறது.

இந்தியாவில் கேரளாவின் திரிச்சூரில் ஜனவரி 30 ஆம் தேதி முதல் நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டார். ஜூன் 26 அன்று 5 லட்சம் (அரை மில்லியன்) நோயாளிகள் என்ற நிலையை இந்தியா எட்டியது. ஆனால் அடுத்த 5 லட்சத்தை எட்ட இந்தியாவுக்கு 149 நாட்கள் பிடித்தன

ஆனால் இதற்கு மாறாக, அமெரிக்காவும் பிரேசிலும் அரை மில்லியன் நோயாளிகளை மிக வேகமாக எட்டியன, அமெரிக்கா 81 நாளிலும் பிரேசில் 96 நாட்களிலும் எட்டின. ஆனால் இரு நாடுகளும் ஒரு மில்லியன் கொரோனா பாதிப்பை எட்ட இந்தியாவை விட சற்றே குறைவான நேரத்தை எடுத்தன. அடுத்த 5 லட்சம் கொரோனா கேஸ்களை எட்ட, அமெரிக்கா 17 நாட்கள் மற்றும் பிரேசில் 19 நாட்கள் பதிவு செய்யதன. ஆனால் இந்தியா 20 நாட்கள் எடுத்தது.

வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா? டிஸ்சார்ஜ் மிக அதிகம்வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா? டிஸ்சார்ஜ் மிக அதிகம்

10 லட்சம் பேர்

10 லட்சம் பேர்

அப்போதிலிருந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெறும் 21 நாட்களில் இரண்டாவது மில்லியனை இந்தியா தொட்டது. அதாவது 21 நாளில் 10 லட்சம் பேர் இந்தியாவில தொற்றால் பாதிக்கப்ட்டனர். ஆனால் அமெரிக்காவில் 43 நாட்கள் ஆனது. பிரேசிலில் 27 நாட்கள் தான் ஆனது.

 அமெரிக்கா பிரேசில்

அமெரிக்கா பிரேசில்

அமெரிக்கா மற்றும் பிரேசிலை விட மிகவேமாக கொரோனா தொற்றின் 20 லட்சம் இலக்கை இந்தியா அடைந்திருப்பதால் விரைவில் இந்த இரு நாடுகளையும் பாதிப்பில் மிஞ்சினாலும் ஆச்சயப்படுவதற்கு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இந்தியா நிலவரம்

இந்தியா நிலவரம்

இரண்டாவது மில்லியன் கேஸ்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவற்றின் பங்கு குறைந்து வருவதோடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தொற்றுநோய் எந்த அளவிற்கு வேகமாக பரவியுள்ளது என்பதை இப்போதைய எண்ணிக்கை நிரூபிக்கிறது. தற்போது இந்தியாவில் 22,14,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44,466 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    Serum நிறுவனத்திற்கு உதவும் Bill Gates.. ரூ.225-க்கு Corona Vaccine ?
    தெளிவாக தெரியவில்லை

    தெளிவாக தெரியவில்லை

    இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போத தற்போதைய நிலையில் இறப்பு குறைவாகவே உள்ளது. இரண்டாவது மில்லியன் கேஸ்களில் முதல் மில்லியனில் ஏறபட்ட இறப்பைக் காட்டிலும் குறைவான இறப்புகளைக் கண்டுள்ளன. இந்தியா ஒரு மில்லியன் கேஸ்களில் 25,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவுசெய்தது, இறப்பு விகிதம் 2.55 சதவீதம் ஆகும். ஆனால் இரண்டாவது மில்லியனில் வெறும் 16,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி உள்ளது. இறப்பு விகிதம் 2.06 சதவீதம் ஆகும். ஆனால் தற்போது நோய்த்தொற்றுகள் இப்போது மிக விரைவான விகிதத்தில் பதிவாகி வருகின்றன, மேலும் ஒரு நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதற்கும் நோயாளியின் இறப்புக்கும் இடையில் சராசரியாக 10 நாள் இடைவெளி இருப்பதால், தற்போதைய இறப்பு விகிதங்கள் எப்படி செல்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை.

    English summary
    India's second million corona cases came faster than the United States and Brazil, the two worst-affected countries due to the pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X