இந்தியா-பாக் மோதல்: ட்ரோல் செய்ய தயாரா இருக்காங்க.. ஷமி, சிராஜ் நன்றாக விளையாடனும்.. ஓவைசி அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். மாறாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றால் முஸ்லிம் வீரர்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர். இதனால் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் பாகிஸ்தானை தோற்கடிக்க திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் எப்போதும் ஹைவொல்டேஜ் கேம் என்றால் அது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது தான். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று பிற நாட்டு அணிகள் விளையாட மறுத்தன.

இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் இந்தியா தவிர பாகிஸ்தான் அணி பிற நாடுகளுக்கு சென்று விளையாடி வருகிறது.

ஆசியக்கோப்பை விவகாரம்

ஆசியக்கோப்பை விவகாரம்

இந்நிலையில் தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணையின்படி அடுத்த ஆண்டு போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். பாகிஸ்தானும் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்து உள்ளது. மேலும் இந்த போட்டியை சிறப்பாக நடத்தினால் பிற கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முன்வரலாம். இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மும்முரமாக உள்ளது.

ஜெய் ஷா கருத்தால் சர்ச்சை

ஜெய் ஷா கருத்தால் சர்ச்சை

இதற்கிடையே தான் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா(மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன்) சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛ஆசிய கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது. மாறாக ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும். பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லுமா, செல்லாதா என்பதில் இறுதி முடிவை மத்திய அரசு தான் எடுக்கும்'' என்றார்.

பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு

பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 2023 ஆசிய கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்துவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா கூறியது ஆச்சரியமளிக்கிறது. இது ஏமாற்றத்தையும் வழங்குகிறது. எந்த விவாதமும் ஆலோசனையும் இன்றி இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது'' என கூறியது. மேலும் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்தியாவில் நடக்கும் உலககோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என மிரட்டல் விடுக்கப்படுகிறது.

அசாதுதீன் ஓவைசி கருத்து

அசாதுதீன் ஓவைசி கருத்து

இதற்கிடையே தான் ஆஸ்திரேலியாவில் உலககோப்பை டி20 போட்டிக்கான சூப்பர் 12 ஆட்டங்கள் இன்று துவங்கி உள்ளன. நாளை மெல்போர்னில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் தான் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏன்?

ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏன்?

நாளை ஏன் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது?. நாம் பாகிஸ்தானுக்கு செல்லாமல் ஆஸ்திரேலியாவில் மட்டும் அவர்களை எதிர்த்து விளையாடுவோம். என்ன இது. கிரிக்கெட்டிலும் அரசியலா. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தால் என்ன நடந்துவிட போகிறது? ஒரு 2 ஆயிரம் கோடி நஷ்டமாகுமா? இது என்ன இந்தியாவை விட முக்கியமா? பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என நான் கூறுகிறேன்'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடாது எனக்கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை அசாதுதீன் ஓவைசி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஷமி, சிராஜூக்கு அட்வைஸ்

ஷமி, சிராஜூக்கு அட்வைஸ்

மேலும் ஓவைசி கூறுகையில், ‛‛இருப்பினும் நாளை (அக்டோபர் 23) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த போட்டியில் பாகிஸ்தானை நசுக்க முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் திறமையை வெளிப்படுத்தி தங்களால் இயன்றதை செய்ய வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா தோற்றால் முஸ்லீம் வீரர்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர்.

ஹிஜாப், தாடி வரிசையில் கிரிக்கெட்

ஹிஜாப், தாடி வரிசையில் கிரிக்கெட்

பொதுவாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றால் சிலர் நெஞ்சை நிமிர்த்துவார்கள். ஆனால் இந்தியா தோற்றால் யார் மீது தவறு சொல்லலாம் என தேட ஆரம்பித்து விடுகின்றனர். இது கிரிக்கெட். ஒரு விளையாட்டு தான். ஹிஜாப் அணிவது, தாடி வைப்பதை பிரச்சனையாக கருதும் சிலர் கிரிக்கெட்டிலும் எங்களை பிரச்சனையாக கருதுகின்றனர்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+