ஏர் சைரன் & பிளாக் அவுட்.. சென்னை உட்பட 259 இடங்கள்.. நாளை எங்கு, எப்படி போர் ஒத்திகை நடைபெறும்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாடு முழுக்க நாளை 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கல்பாக்கத்தில் போர் ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

போர் ஒத்திகை
இதற்கிடையே நாடு முழுக்க போர் ஒத்திகையை நடத்த மத்திய அரசு நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தது. நாளே மே 7ம் தேதி இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாட்டில் எந்தெந்த நகரங்களில் இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
259 இடங்கள்
அதன்படி நாளைய தினம் நாடு முழுக்க 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 1
இந்த 259 மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான போர் ஒத்திகை நடைபெறும். இதில் பிரிவு ஒன்றில் தேசிய தலைநகரான டெல்லி இடம்பெற்றுள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தில் சூரத், வதோரா, காக்ராபூர்; மகாராஷ்டிராவில் மும்பை, உரான், தாராபூர்; தல்ச்சர் (ஒடியா), ராஜஸ்தானில், கோட்டா, ராவத்-பட்டா; தமிழ்நாட்டில் சென்னை, கல்பாக்கம்; உத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் ஆகிய 13 இடங்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல 2ம் பிரிவில் மொத்தம் அதிகபட்சமாக 201 இடங்கள் உள்ளன. மூன்றாவது பிரிவில் 45 இடங்கள் உள்ளன. இதுபோல மொத்தம் 259 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
ஏர் சைரன், பிளாக் அவுட்
இந்தப் போர் ஒத்திகையின் போது சில அடிப்படை விஷயங்கள் பொதுமக்களுக்குச் சொல்லித் தரப்படும். அதாவது ஏர் சைரன்கள் ஒலித்தால் உடனடியாக எப்படிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.. போர்க் காலங்களில் முக்கியமான கட்டிடங்களில் மின்விளக்குகளை முழுமையாக அணைத்து எப்படி அதைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்டவை இதில் சொல்லித் தரப்படும்.

இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் பல்வேறு மாநிலங்கள் எல்லைக்கு அருகே அமைந்துள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிரும் நிலையில், அங்கு நடக்கும் போர் ஒத்திகைகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் சீனா, வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் எல்லையைப் பகிரும் நிலையில், அங்கும் போர் ஒத்திகை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
1971ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை
முதலுதவி கிட்கள், டார்ச்கள், மெழுகுவர்த்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தொழில்நுட்பச் சிக்கல் ஏற்படலாம் என்பதால் கையில் ரொக்கத்தையும் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1971ம் ஆண்டுக்குப் பிறகு போர் ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications