பாகிஸ்தானுக்கு இனி சிந்து நதி நீர் போகாது.. பெரிய திட்டத்தை கையில் எடுக்கும் இந்தியா! ஆஹா சூப்பர்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக இப்போது இந்தியா மிகப் பெரிய ஒரு திட்டத்தைப் போட்டிருக்கிறது. சிந்து நதி பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுத்து, இந்தியாவிலேயே அதை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தியா ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்த போதிலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தியே வைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு நடவடிக்கை
இதற்கிடையே சிந்து நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு அடுத்து சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. முதலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததன் காரணத்தை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறது.. அதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து மக்களிடையே விளக்கப்படும். மேலும், இந்த நடவடிக்கை மூலம் சிந்து நதியை நாமே எப்படிப் பயன்படுத்தலாம்.. இதன் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
மத்திய அமைச்சர்கள் தலைமையில் இந்த விழிப்புணர்வு திட்டம் நடக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய வார்த்தைகளில் இவர்கள் விளக்குவார்கள். குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் வசிக்கும் மக்கள் இது குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தரத் திட்டமிட்டுள்ளனர்.
இதுதான் திட்டம்
சிந்து நதி நீரை மாநிலங்களுக்கு இடையே சிறப்பாகப் பயன்படுத்த ஒரு நீண்ட கால நீர்த் திட்டத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கம் என்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் சிந்து நதி நீரை எடுத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நான்கு மாநிலங்களில் உள்ள 13 கால்வாய் அமைப்புகள் இணைக்கப்படுகிறது.. இதன் மூலம் அந்தப் பகுதிகளுக்குக் கிடைக்கும் நீர் அதிகரிப்பது மட்டுமல்லாமல், உபரி நீரை இந்தியாவிலேயே நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மூன்றே ஆண்டுகள்
இதன் ஒரு பகுதியாக செனாப் நதியிலிருந்து ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதி அமைப்புகளுக்கு 160 கிமீ நீளமுள்ள கால்வாய் அமைக்கப்படும்.. எல்லாவற்றையும் விட மேலாக சிந்து நதி நீரை ராஜஸ்தானில் உள்ள கங்கை கால்வாயுடன் இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக இந்தப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதிப்படுகை என்பது ராவி, ஜீலம் மற்றும் சிந்து நதிகளால் உருவாக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டவை. அதேபோல இந்த ஒப்பந்தம் சட்லெஜ், பியாஸ் மற்றும் செனாப் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவிற்கு உரிமையை வழங்குகிறது. அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிகளின் நீர் இந்தியாவிற்கும் செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கும் கிடைக்கும்.
சொல்லப்போனால் இந்த ஆறு நதிகளின் மீதும் இந்தியாவுக்கே உரிமை உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தானுக்கு வழங்க அனுமதித்தது. 1960ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் போர் நடந்த போதும் கூட அப்படியே இருந்தது. ஆனால், எப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை பஹல்காமில் தாக்கியதாலேயே மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications