ஒரே நாளில் உச்சத்தில் அமர்ந்த கொரோனா.. புதிதாக 1590 பேருக்கு தொற்று.. வெக்கேஷன் வந்தாச்சு.. கவனம்
டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 1590 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் 200 -க்கும் மேற்பட்ட உலக நாடுகளை புரட்டி போட்டது கொரோனா எனும் உயிர் கொல்லி வைரஸ். இதை தொற்று நோயாகவே உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் இறந்தனர். அது போல் மருத்துவமனையில் சேர்க்க இடம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

சடலங்கள்
இந்தியாவில் சடலங்களை எரிக்கவோ புதைக்கவோ நாள்கணக்கில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சில சடலங்கள் கங்கையில் வீசப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அது போல் வெளிநாடுகளில் குவியல் குவியலாக சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில் உலக நாடுகள் கொரோனாவை வெல்ல சிறந்த ஆயுதம் தடுப்பூசி என கருதியது.

இரு தடுப்பூசிகள்
இதையடுத்து இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. அதை மக்கள் இரு தவணைகளாக செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அது போல் அரசு இலவசமாகவே இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியது. பின்னர்
மூன்றாவது பூஸ்டரும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இந்தியாவில் முதல் மற்றும் 2 ஆவது அலைதான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் மூன்றாவது அலை அந்தளவுக்கு பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை. எனவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே இருந்தது.

எச்3என்2
எனினும் எச்3 என்2 எனும் ப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவியது. இதன் பாதிப்புகளும் அதிகமாகவே இருந்தன. இது ஒரு புறம் இருக்க தற்போது கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. 146 நாட்கள் கழித்து இன்றைய தினம் இந்தியாவில் ஒரே நாளில் 1590 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருந்தன. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது.

எத்தனை பேர் பலி
கொரோனாவுக்கு 6 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. அந்த 6 பேரில் 3 பேர் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தலா ஒருவர் கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 1.33 சதவீதமாக உள்ளது. வாரந்தோறும் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 1.23 சதவீதமாகும்.

புதிய கேஸ்கள்
புதிதாக கொரோனா கேஸ்கள் உயர்ந்துள்ளதால் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 4,47,02,257 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,41,62,832 ஆக உள்ளது. அது போல் இறப்பு எண்ணிக்கை என்பது 1.19 சதவீதமாகும். இதுவரை 220.65 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications