இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு சற்று குறைவு- 2,76,261 பேருக்கு கொரோனா உறுதி- 3,880 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,76,261. கடந்த 24 மணிநேரத்தில் 3,880 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,55,35,512 ஆக உள்ளது. உலகின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,30,996. உலகம் முழுவதும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,45,62,358.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. புதன்கிழமையன்று மட்டும் ஒருநாள் பாதிப்பு 2,76,261 ஆக இருந்தது. அதேபோல் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா மரணங்கள் 4 ஆயிரத்தை தாண்டியதாக பேரச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 3,880 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,71,405. நாட்டில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,87,156. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,23,48,683. தற்போதைய நிலையில் நமது நாட்டில் 31,35,566 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 34,031 பேருக்கு நேற்ற் கொரோனா உறுதியானது. மேலும் மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 1,000-த்தை தாண்டியதாக இருந்தது. இது தற்போது 594 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 34,875; கர்நாடகாவில் 34,281; கேரளாவில் 32,762 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. கர்நாடகாவில் 468 பேரும் தமிழகத்தில் 365 பேரும் நேற்று கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications