இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2-ம் நாளாக 3,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 3,095 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 3,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1,000; 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் காலையுடனான 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,151 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டியது. இந்தியாவில் 3016 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,095 ஆக பதிவாகி உள்ளது.
கொரோனா நிலவரம் தொடர்பான மத்திய அரசு அறிக்கை:
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 6,553 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 15,208 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.03 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொதம் 4,41,69,711 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 3,095 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.61% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.91% இதுவரை மொத்தம் 92.15 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,18,694 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications