இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை- இந்தியா
Recommended Video

டெல்லி: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை துளியும் இல்லை என இந்தியா கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அச்சமும் வெறியும் கொண்டு இந்தியாவை தாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதை இந்தியா முறியடித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காஃபூர் கூறுகையில் இந்திய எல்லைக்குள் இன்று அதிகாலை புகுந்த 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்.

இந்தியா மறுப்பு
இந்திய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார் என கஃபூர் பரபரப்பு தகவலை அளித்துள்ளார். இந்த நிலையில் இதை இந்தியா மறுத்துள்ளது.

உண்மை இல்லை
இதுகுறித்து இந்திய விமானப் படை கூறுகையில் இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை. அவ்வாறு அந்நாடு கூறியதில் உண்மையும் இல்லை.

இந்தியா
சுட்டு வீழ்த்தியதாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் பழைய புகைப்படங்களாகும். அதுபோல் இந்திய விமானி யாரையும் அந்நாடு கைது செய்யவில்லை என இந்தியா விளக்கமளித்துள்ளது.

பொய் அம்பலம்
புல்வாமாவுக்கு பதிலடியாக நேற்றைய தினம் இந்தியா, பாகிஸ்தானுக்குள் புகுந்து வெடிப்பொருட்களை வீசியது. இதில் பயங்கரவாதிகள் பலர் பலியாகினர். ஆனால் இதை பாகிஸ்தான் அரசு மறுத்தது. இந்த நிலையில் பழைய படங்களை காட்டி இந்திய விமானத்தை சுட்டதாகவும் விமானியை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் பொய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications