மிரட்டிய டிரம்ப்.. இறங்கி போகும் இந்தியா? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் திடீரென நிறுத்தம்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் கடந்த வாரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. ரஷ்யா வழங்கி வந்த எண்ணெய் தள்ளுபடிகள் குறைந்ததும், உக்ரைனில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்தியாவை எச்சரித்ததும் இதற்குக் காரணமென ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ரஷ்யாவிலிருந்து கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடாகும். ரஷ்யாவின் முக்கிய வருவாய்க்கான ஆதாரமாக இது விளங்குகிறது.

Donald Trump India

இந்தியா ரஷ்யா எண்ணெய் வர்த்தகம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) மற்றும் மங்களூர் ரிஃபைனரி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (MRPL) போன்ற இந்தியாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கடந்த வாரமாக ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யவில்லை.

இந்த நிறுவனங்கள் வழக்கமாக ரஷ்ய எண்ணெயை டெலிவரி அடிப்படையில் வாங்கி வருகின்றன. தற்போது, மத்திய கிழக்கு நாடுகளின் மின்பொருட்களான அபுதாபியின் முர்பான் கச்சா எண்ணெய் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் எண்ணெய் போன்ற மாற்று வகைகளைச் சந்தையிலிருந்து பெற்று வருகின்றன.

இந்தியா ரஷ்யா அமெரிக்கா மோதல்

தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்யாவுடன் வருடாந்திர ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. மேலும், இந்தியாவில் ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குபவர்களாகவும் இவை திகழ்கின்றன. ரஷ்ய எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெஃப்ட் (Rosneft) இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜூலை 14 அன்று, ரஷ்யா உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். 2022-ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் தள்ளுபடிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. ரஷ்ய ஏற்றுமதி குறைவு மற்றும் நிலையான தேவை போன்ற காரணிகளால், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து விலகிச் செல்ல தொடங்கி உள்ளன.

தற்போது டிரம்ப் விடுத்த எச்சரிக்கை காரணமாக இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் கடந்த வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிற்கு எதிராக வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இன்று முதல் அந்த வரிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால் இந்தியா இதற்கு பதிலடி வரிகள் எதையும் விதிக்காது, இந்தியா இப்போதைக்கு வலுவான பதிலடி எதுவும் கொடுக்காது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் எச்சரிக்கை இந்தியா

இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கிய சர்வதேச நிகழ்வாகும்.இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை. பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு நலன் கருதி அமைதி உடன்பாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ராணுவ தளவாடத் தேவைகளில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு விதிக்கப்படும் அபராதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+