இந்தியாவில் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா.. மத்திய சுகாதாரத் துறை
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் கொரோனா தொற்று நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேர பாதிப்பை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரே நாளில் 1,32,788 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இதுவரை 2,83,07,832 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் 2,31,456 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை 2,61,79,085 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஒரே நாளில் 3,207 பேர் மரணமடைந்துள்ளார்கள். இதுவரை 3,35,102 பேர் பலியாகிவிட்டனர்.
தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,93,645 பேராகும். இதுவரை 21,85,46,667 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிய நிலையில் தற்போது படிப்படியாக ஒன்றரை லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications