இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு ... மீளும் நம்பிக்கை
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 2,35,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 3,35,939 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,35,939 பேர் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமையன்று 2,86,384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 35 ஆயிரம் பேருக்கு மேல் குறைந்து 2,51,209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில், 2 வது நாளாக கொரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3,35,939 பேர் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா பாசிட்டிவ் விகிதம் 13.39% ஆக உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 871 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 20,04,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
நாடு முழுவதும் 1,65,04,87,260 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 74 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications