மாநிலங்களில் மரண ஓலம்... ஒரே நாளில் 2,764 பேர் கொரோனாவுக்கு பலி- உலகிலேயே மிக அதிக உயிரிழப்புகள்!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 2,764 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் ஒருநாள் கொரோனா மரணம் அதிகம்.
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 148,478,937. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,133,629. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 126,099,126.

அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,875,045. ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,456. ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 455.

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் திங்கள்கிழமை இரவு 11 மணி வரை மொத்தம் 3,19,329 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,76,25,749 ஆக உயர்ந்துள்ளது.

2,762 பேர் ஒரே நாளில் மரணம்
திங்கள்கிழமை மட்டும் இந்தியாவில் 2,762 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் திங்கள்கிழமையன்று இந்தியாவில்தான் மிக அதிக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,97,880 ஆகும்.

மாநிலங்கள் நிலவரம்
மகாராஷ்டிராவில் 48,700, உத்தரப்பிரதேசத்தில் 33,574, கர்நாடகாவில் 29,744 பேருக்கு திங்கள்கிழமை மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 524 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 380 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 249 பேரும் கொரோனாவுக்கு நேற்று பலியாகினர்.












Click it and Unblock the Notifications