இந்தியாவில் இருமடங்கு அதிகரிப்பு... நேற்று 90,928 பேருக்கு கொரோனா உறுதி- 325 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒரே நாளில் 325 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக பதிவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்று காலை 8 மணியுடனான கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை ஒப்பிடுகையில் 56.5% அதிகமாகும். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,82,876. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 19,206 பேர் மீண்டுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,43,41,009.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 14,022 பேருக்கும் டெல்லியில் 10,665 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று 4,862 பேருக்கும் கேரளாவில் 4,801 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications