கொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு! உலகிலேயே அதிகம்
டெல்லி: கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
Recommended Video
வியாழக்கிழமையான நேற்று, நாடு மற்றொரு கொரோனா உச்சம் எட்டியது. 4.14 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 3,927 இறப்புகள் பதிவாகின. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் தினமும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம், இந்தியா உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டைவிடவும், தொடர்ச்சியாக 10 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்த நாடாக மாறியுள்ளது. இதற்கு முன்னர், அமெரிக்கா 10 நாட்களில் 34,798 மற்றும் பிரேசில் 32,692 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தினசரி நோய்த்தொற்றுகள் வியாழக்கிழமை இரண்டாவது நாளில் 4 லட்சத்தை தாண்டி 4,14,554 கோவிட் -19 கேசாக உயர்ந்தன. புதன்கிழமை, நாட்டில் 4,12,784 கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகின.
நாட்டின் மொத்த கோவிட், இறப்பு எண்ணிக்கை 2,34,083 ஆக உயர்ந்துள்ளது, 24 மணி நேரத்திற்குள் 3,915 இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த கொரோனா வைரஸ் தொற்று இப்போது 2,14,91,598 ஆக உள்ளது, அதே நேரத்தில் மொத்த இறப்புகள் 2,34,083 ஐ எட்டியுள்ளன.
இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இதுவரை நம்பப்பட்டது. ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.












Click it and Unblock the Notifications