போர் நிறுத்தத்தை மீறி தாக்கும் பாகிஸ்தான்! பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு உத்தரவு! முழு சுதந்திரம்
டெல்லி: கடந்த சில மணி நேரமாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில், பாகிஸ்தானின் விதிமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது எனவும், போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானின் செயல் கண்டிக்கத்தக்கது என்பதோடு, இந்திய ராணுவம் கடுமையான பதிலடி தர உத்தரவிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு, காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி மீண்டும் ட்ரோன் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் உச்சகட்ட கண்காணிப்பில் இருந்த இந்திய ராணுவமும் உடனடியாக அதற்கு பதில் அளித்தது.
இந்திய எல்லை நோக்கி வந்த பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. போர் நிறுத்தத்தை மீறி என்ன நடக்கிறது என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் குஜராத்திலும் ட்ரோன்கள் பறப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பதிவிட்டது பரபரப்பை மேலும் அதிகமாக்கியது.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானின் செயல் கண்டிக்கத்தக்கது என்பதோடு, இந்திய ராணுவம் கடுமையான பதிலடி தர உத்தரவிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே இன்று மாலை புரிந்துணர்வு ஏற்பட்டது. கடந்த சில மணி நேரங்களாக இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுகிறது. இந்த எல்லை அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது.
#WATCH | Delhi: Foreign Secretary Vikram Misri says, "The Armed Forces are maintaining a strong vigil on the situation and have been given instructions to deal strongly with any instances of repetition of the violations of the borders along the international border as well as the… pic.twitter.com/35qhh0AFWU
— ANI (@ANI) May 10, 2025
இந்த அத்துமீறல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தானே பொறுப்பு. இந்த சூழ்நிலையை பாகிஸ்தான் சரியாக புரிந்து கொண்டு, இந்த ஊடுருவலை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதே நேரத்தில் இந்தியாவின் ஆயுதப் படைகள் நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மேலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றில் எல்லை மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் கடுமையாகக் கையாள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications