8 நிமிடம் போதும்.. சீனா, பாகிஸ்தானை அலறவிடப்போகும் இந்தியா -ரஷ்யா! பிரேமாஸ் II ஏவுகணையின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் சீண்டி வரும் சீனா, பாகிஸ்தானை மிரட்ட நண்பன் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா பிரமாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. வெறும் 3 முதல் 5 நிமிடத்தில் பாகிஸ்தான், சீனாவின் முக்கிய நகரங்களை தாக்கி அழிக்கும் வகையில் நம் நாடு மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து பிரமோஸ் II ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணி மும்முரமாக தொடங்கி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ரஷ்யா.. நம் நாட்டின் உற்ற நண்பன். இந்தியாவுடன் காலம் காலமாக ரஷ்யா நல்லுறவில் இருப்பதோடு, நம் நாட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தோள் கொடுக்கும் தோழனாக இருக்கிறது ரஷ்யா. பாகிஸ்தான் உடனான போரின்போது நம் நாட்டுக்கு பக்கபலமாக இருந்த ரஷ்யா இன்று வரை நல்லுறவை தொடர்ந்து வருகிறது.

brahmos ii india china pakistan ii

குறிப்பாக பாதுகாப்புத்துறையில் ரஷ்யா நமக்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. நம் நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதோடு இருநாடுகளும் சேர்ந்து ஏவுகணை தயாரிப்பு பணிகளையும் தொடங்கி வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் நம் நாடு பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. ரஷ்யாவும், நம் நாடும் சேர்ந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. நம் நாட்டில் உள்ள டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மஷிநோஸ் அட்ரோ ஏணியா நிறுவனங்கள் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்தன. இந்த ஏவுகணை என்பது 290 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது. அதோடு மாக் 2.8 என்ற வேகத்தில் செல்லும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணைக்கு நம் நாட்டில் உள்ள பிரம்மபுத்திரா ஆறு மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா ஆறு ஆகியவற்றின் பெருமையை கூறும் வகையில் பிரமோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை பிலிப்பைன்ஸ் நாடு வாங்கி உள்ளது. அதேபோல் வியட்நாம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவை வாங்க ஆர்வமாக உள்ளன. இதுதவிர பல நாடுகள் இந்த ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ளன.இந்நிலையில் தான் நம் நாட்டுடன் சேர்ந்து ரஷ்யா பிரமோஸ் II ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கும் பணியை தொடங்குவதில் ஆர்வமாக உள்ளது.

இந்த பிரமோஸ் II ஏவுகணை என்பது உலகில் மிகப்பெரியதாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஏவுகணை 1,500 கிலோமீட்டர் ரேஞ்சை கொண்டதாக இருக்கும். இதன்மூலம் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை பிரமோஸ் II ஹைப்பர்சோனிக் ஏவுகணையால் எளிதாக தாக்கி அழிக்க முடியும்.

இந்த ஏவுகணை என்பது ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு வரை செல்லும். அதாவது மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில் ஏவுகணை சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த பிரமோஸ் II ஏவுகணை என்பது ரஷ்யாவின் ஜிர்கான் டெக்னாலஜியை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், விமானத்தில் சுமந்து சென்று தாக்க வைக்க முடியும். அதேபோல் நிலத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை பயன்படுத்தி எதிரிகளை குறிவைத்து தாக்க முடியும். குறிப்பாக அண்டை நாடான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் எந்த பகுதியை வேண்டுமானாலும் குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 5 முதல் 8 நிமிடத்தில் இந்த பிரமோஸ் II ஏவுகணையை சீனா, வங்கதேசம், பாகிஸ்தானில் உள்ள இலக்கை நோக்கி தாக்க முடியும்.

இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி தான் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஏவுகணை 2027-2028 ம் ஆண்டில் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன்மூலம் பிரமோஸ் II ஏவுகணை தயாரிப்பு என்பது சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+