நாட்டு மக்களுக்கோர் நல்ல செய்தி! கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 60,000க்கு கீழே குறைந்தது!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்கள் எண்ணிக்கை 60,000-க்கும் கீழே குறைந்துள்ளது. நாட்டில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கை 57,410.
இந்தியாவில் கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 10,000-த்தை தாண்டியதாக பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 3 நாட்களாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000-த்தை தாண்டியதாக மட்டுமே இருந்தது.

இந்தியாவில் நேற்று முன்தினம் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்தது. நேற்று முன்தினம் காலையுடனான 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் நேற்று குறைந்தது. மொத்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 63,380. மேலும் நேற்று முன்தினம் மொத்தம் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணிநேரத்தில் 9629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 29 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் மொத்தம் 9355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 26 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 60,000-த்தை தாண்டியதாகவே பதிவாகி இருந்தது. தற்போது இது 60,000-க்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனாவுக்கு நாட்டில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications