கொரோனா பாதிப்பு.. மின்னல் வேகத்தில் 40 லட்சத்தை எட்டிய இந்தியா!.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடான பிரேசிலை நெருங்கிவிட்ட இந்தியா இப்போது மொத்த பாதிப்பில் 40 லட்சத்தை தாண்டி உள்ளது. 30 லட்சத்தில் இருந்து 40 லட்சம் என்ற எண்ணிக்கை மின்னல் வேகத்தில் இந்தியா எட்டியுள்ளது.

இன்ற காலை நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சின் தகவல்களின் படி கொரோனா எண்ணிக்கையை 39,36,747 ஆக இருந்தது. அதன்பின்னர் ஒவ்வொரு மாநிலங்களாக தொற்று எண்ணிக்கை விவரத்தை அறிவித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவின் படி, இந்தியாவில் கொரோனாவால் 40,14,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து இதுவரை 31,01,333 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 69629 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 8,43,309 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மத்திய அரசு நாளை காலை 8 மணிக்கு வெளியிடும் புள்ளி விவர பதிவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துவிட்டதை பிரதிபலிக்கும்.

தொற்று எவ்வளவு

தொற்று எவ்வளவு

இந்தியா தினசரி தொற்று எண்ணிக்கை 80 ஆயிரத்திற்க அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் மத்திய அரசின் அறிவிப்பின் படி இந்தியாவில் 83,341 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. இன்றும் 80 ஆயிரத்தை கடந்துள்ளது. எனவே நாளை காலை எவ்வளவு பேர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

உயிரிழப்பு குறைவு

உயிரிழப்பு குறைவு

இந்தியாவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளதால், மீட்பு விகிதம் 77 சதவீதமாக உள்ளது. கொரோனா இறப்பு விகிதம் நாட்டில் 1.74 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு இன்று தெரிவித்தது.

2வது இடத்தை நோக்கி

2வது இடத்தை நோக்கி

தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு தான் உலகம் முழுவதிலும் இருந்து கொரோனா தரவுகளை தொகுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியா விரைவில் பிரேசிலை முந்த வாய்ப்புள்ளது,

கொரோனா தொற்று இந்தியா

கொரோனா தொற்று இந்தியா

வெள்ளிக்கிழமை நிலவரப்படி பிரேசிலுக்கும் இந்தியாவிற்கும் 60,000 தொற்று தான் வேறுபாடு இருந்தது. எனவே நாளை அதை மாற வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக இந்திய அரசு லாக்டவுனை தளர்த்திவிட்டதால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இந்தியாதான் உலகின் மிகஅதிகமான ஒரு நாள் கொரோனா பாதிப்பு உள்ளதாக பதிவு செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+