இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது- 11 நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

50 லட்சத்தை கடந்த பாதிப்பு
இதனால் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,20,360. கடந்த 11 நாட்களில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

10 லட்சத்தை கடந்த மகாராஷ்டிரா
கொரோனாவால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,39,111. உயிரிழந்தோர் எண்ணிக்கை 82,091. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 20,482 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் இம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,97,856 ஆக உயர்ந்தது.

30 ஆயிரத்தை கடந்த மரணங்கள்
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 515 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கின்றனர். இங்கு கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 30,409. மகாராஷ்டிரா கொரோனா மரணங்கள் எண்ணிக்கை பிரான்ஸ், பெரு நாடுகள் பாதிப்பை நெருங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,75,273. ஆந்திராவில் ஒரே நாளில் 8,846 பேருக்கு தொற்று உறுதியானது. இங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,83,925. ஆந்திராவில் 4,86,531 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர்

5 லட்சத்தை தாண்டிய தமிழகம்
தமிழகத்தில் ஒரே நாளில் 5,697 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கின்றனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,502 ஆகவும் உள்ளது. கொரோனா மரணங்களில் தமிழகம் இந்திய அளவில் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது.தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,58,900
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications