இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது- மேலும் 61,749 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 61,749 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,05,185 ஆக அதிகரித்தது. கொரோனாவால் ஞாயிற்றுக்கிழமையன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,896.

ஒரே நாளில் 846 பேர் பலி
கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,36,796 ஆகும். கொரோனாவால் ஞாயிறு மட்டும் 846 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 57,692 ஆக அதிகரித்தது.

10,441 பேருக்கு கொரோனா
தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,10,144 மட்டும். மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 10,441 பேருக்கு கொரோனா உறுதியானது. அம்மாநில மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,82,383 ஆகும். ஒரே நாளில் 258 பேர் உயிரிழந்ததால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 22,253 ஆக உயர்ந்தது.

தமிழகம், ஆந்திரா
கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்திருக்கிறது. ஆந்திராவில் 7,895 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,53,111 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video

கர்நாடகா, உ.பி. மேற்கு வங்கம்
கர்நாடகாவில் 5,938 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,77,814 ஆக உயர்ந்தது. உ.பி.யில் 5,325 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு கொரோ பாதிப்பு எண்ணிக்கை 1,87,781 ஆனது. மே.வங்கத்தில் 3,274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,870 ஆனது.












Click it and Unblock the Notifications