டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 33 லட்சத்தை தாண்டிய கொரோனா.. ஒரே நாளில் 75,760 புதிய கேஸ்கள்.. 1023 மரணங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,760 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துவிடும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Indias Covid cases 75,760 with fresh cases in the last 24 hours

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது. அதாவது 33,10,235 ஆகும். இதில் 7,25,991 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

25,23,772 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 60,472 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே - ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே - ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

கடந்த 24 மணி நேரத்தில் 1023 பேர் பலியாகிவிட்டனர். உலக நாடுகளில் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

English summary
India's Coronavirus case toll crosses 33 lakh with 75,760 fresh cases in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X