டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருங்குகிறோம்.. இந்தியாவில் இதுவரை 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.. மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக உலகை கிலியில் வைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.. அதற்கான முயற்சிகளில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்தநேரத்தில் நமக்கு கை கொடுத்து உதவி கொண்டிருப்பது தடுப்பூசிகள் மட்டும்தான்.. அதனால், உலக நாடுகள் முக்கிய கவனத்தை தடுப்பூசிகளை செலுத்துவதில் திருப்பி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி... 67% பேருக்கு முதல் டோஸ்... 25% பேருக்கு 2-வது டோஸ்... அமைச்சர் மா.சு. தகவல்..! கொரோனா தடுப்பூசி... 67% பேருக்கு முதல் டோஸ்... 25% பேருக்கு 2-வது டோஸ்... அமைச்சர் மா.சு. தகவல்..!

பயன்பாடுகள்

பயன்பாடுகள்

பல நாடுகள் 2 டோஸ்களையும் போட்டுவிட்டு, 3வது டோஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், இந்தியாவிலும் 2வது டோஸ்களை செலுத்தும் பணி மும்முரமாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை செலுத்தி கொள்ள நம் மக்கள் ஒருவித தயக்கம் காட்டினர்.. பிறகு, அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டன.. தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கான சிறப்பு பரிசுகளும் ஆங்காங்கே அறிவிக்கப்பட்டன.

 100 சதவீதம்

100 சதவீதம்

இந்தியாவை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள்தொகை 94 கோடியாக உள்ளது.. கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.. வரும் டிசம்பருக்குள் தடுப்பூசியை செலுத்த தீவிரம் எடுக்கப்பட்டது.. இத்தனை பேருக்கும் முழுமையாக தடுப்பூசியை செலுத்திவிட முடியுமா? 100 சதவீத இலக்கை பெற்றுவிட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், முதல் பரவல் அலையை விட, 2வது வைரஸ் பரவல் அதிக ஆபத்தை நமக்கு ஏற்படுத்தியது.. இதனால், தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்கள் தானாகவே அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர். இப்போது 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய சுகாதாரத்துறை

மத்திய சுகாதாரத்துறை

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், நாடு முழுவதும் 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.. அந்த வகையில், 100 சதவீதம் இலக்கை விரைவில் இந்தியா எட்டிப்பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.. இதனிடையே, இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 98.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
     சுகாதாரத்துறை

    சுகாதாரத்துறை

    அதில், 18 - 44 வயது வரை முதல் தவணை - 39,58,41,135 பேருக்கும், இரண்டாம் தவணை - 11,40,66,397 பேருக்கும், 45 - 59 வயது முதல் தவணை - 16,84,48,531 பேருக்கும், இரண்டாம் தவணை - 8,71,46,650 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.. 60 வயதுக்கு மேல் முதல் தவணை - 10,60,88,795 பேருக்கும், இரண்டாம் தவணை - 6,17,86,566 பேருக்கும், சுகாதாரத்துறை முதல் தவணை - 1,03,76,000 பேருக்கும் இரண்டாம் தவணை - 90,91,443 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    முன்களப் பணியாளர்கள் முதல் தவணை - 1,83,62,479 பேருக்கும், இரண்டாம் தவணை - 1,55,61,415 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.. ஆகமொத்தம் இந்தியாவில் 98,67,69,411 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்ட நிலையில், விரைவில் 100 சதவீதத்தை எட்டிப்பிடித்துவிடும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    English summary
    India's cumulative COVID-19 vaccination coverage crossed 99 crore today, says, Union Health Minister Mansukh Mandaviya
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X