இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும்.. பொருளாதார அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும். நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது குறைந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

அதன்பிறகு இரு அவைகளிலும் 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரம் வருமாறு:

* 2025-26ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை அமையும். உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படை தன்மை என்பது வலுவாக உள்ளது. அதேபோல் நிதி ஒருங்கிணைப்பு, நிலையான தனியார் நுகர்வு உள்ளிட்டவற்றால் 6.8 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி என்பது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 2025-2026ம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி என்பது 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதமாக இருக்கும். இது கடந்த 2020-21ல் கொரோனா பரவிய காலத்தில் 5.8 சதவீதமாக குறைந்து இருந்தது. அதன்பிறகு 2021-22 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9.7 சதவீதமாகவும், 2022-23ல் 7 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டில் 8.2 சதவீதமாகவும் இருந்தது. வரும் ஆண்டில் 6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

* கடந்த 2020-21ம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 6.3 முதல் 6.8 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. கடந்த 2020-21ம் ஆண்டில் கொரோனா காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 5.8 சதவீதமாக இருந்தது. 2021-22ம் ஆண்டில்9.7 சதவீதமாகும், 2022-23ம் ஆண்டில் 7 சதவீதமாகும், கடந்த 2022-23ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்தது.

* 2025ம்நிதியாண்டின் 4ம் காலாண்டில் காய்கறி விலைகள் குறைய வாய்ப்புள்ளது. காரிஃப் அறுவடை காலத்தால் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.

* 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் சமநிலையில் உள்ளன.

* நாட்டின் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் மூலம் உலக அரங்கில் போட்டி போடும் தன்மையை இந்தியா வலுவாக முன்னெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நிதியாண்டு 2025ல் இரண்டாம் காலண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.4சதவீதமாக ஆக உள்ளது. இது 2024 இரண்டாவது காலாண்டில் 6.6 சதவீதமாக இருந்தது. நாட்டில் முறைசாரா துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. நிகர ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாக்கள் நிதியாண்டு 19 இல் 61 லட்சத்திலிருந்து நிதியாண்டு 24-இல் 131 லட்சமாக இரட்டிப்பாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+