டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி... மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க அனுமதி..!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் மூலம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது எளிதானது என்பதால் இதற்கு மிகுந்த முக்கியத்துவ வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியில் எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

Indias first homemade mRNA vaccine gets nod for human trials

கொரோனா வைரஸில் உள்ள ஆர்.என்.ஏ. மரபு சங்கிலியில் உள்ள ஒரு பிரதி தான் எம்.ஆர்.என்.ஏ. ஆர்.என்.ஏ. மற்றும் எம்.ஆர்.என்.ஏ. என்ற இரண்டிலும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருப்பதால் எம்.ஆர்.என்.ஏ. தனியாக பிரிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொரோனா வைரஸின் கூர் புரதங்கள் உற்பத்தி ஆகும். மேலும், அவற்றை எதிர்ப்பதற்காக எதிர் அனுக்களையும் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி உருவாக்கும். எதிரணுக்கள் உருவாவதால் கொரோனா வைரஸ் உடலில் நுழைந்தாலும் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி வீரியமாக செயல்படும்.

புனேவில் உள்ள ஜென்னோவா நிறுவனம் அமெரிக்காவின் எச்.டி.டி. நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிதலில் புதிய மைல்கல் என்றுக் கூட சொல்லலாம்.

அமெரிக்காவிலும் ஃபைசர் தடுப்பூசிக்கு பச்சைக் கொடி.. வல்லுநர் குழு ஓகே.. அவசர தேவைக்கு அனுமதி?அமெரிக்காவிலும் ஃபைசர் தடுப்பூசிக்கு பச்சைக் கொடி.. வல்லுநர் குழு ஓகே.. அவசர தேவைக்கு அனுமதி?

இந்தியாவின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை மனித பரிசோதனைக்கு அனுமதி தருமாறு ஜென்னோவா நிறுவனம் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பத்திருந்தது. அதன் பேரில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனைக்கு கட்டுப்பாடுகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியின் மனித ஆய்வு முடிவுகள் வரும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India's first homemade mRNA vaccine gets nod for human trials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X