"மோஸ்ட் வான்டட்" கிரிமினல்! 30 ஆண்டுகள் டிமிக்கி கொடுத்தவர் கைது! தமிழகத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா
டெல்லி: போலீசாருக்கு ஆட்டம் காட்டிவிட்டுப் பல மாநிலங்களுக்குச் சுற்றிய நாட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் நகரத்தில் இருக்கும் குடிசை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, போலீஸ் படை சுற்றி வளைத்தது.
இத்தனை போலீசார் எதற்காக இங்கு வருகின்றனர் என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பினர். அப்போது தான் அந்த வீட்டில் இருந்த 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

முதியவர்
இதையெல்லாம் அங்கிருந்தவர்கள் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் போலீசார் இவரது பழைய கால வாழ்க்கை குறித்து சில அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்து உள்ளனர். ராணுவத்தில் கொஞ்சக் காலம் பணிபுரிந்து இருந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாகவே கொள்ளை மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வருகிறார். ரேஷன், வாக்காளர் அட்டை என அனைத்தையும் போலியாக பெற்ற அவர், உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையையே தொடங்கிவிட்டார்.

ஓம்பிரகாஷ்
இத்தனை ஆண்டுகளாக லாரி ஓட்டுவது, பக்தி பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது என பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார். இப்படிப் பல ஆண்டுகள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த அவரின் பெயர் ஓம்பிரகாஷ்! சாதாரண ராணுவ வீரர் எப்படி முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக மாறினார், எப்படி இத்தனை ஆண்டுகளாகத் தப்பினார், முக்கியமாக இப்போது எப்படி போலீசாரிடம் சிக்கினார் என்பதைப் பார்க்கலாம்.

யார் இவர்
ஓம் பிரகாஷின் சொந்த மாநிலம் ஹரியானா. இவரது சிறு வயது வாழ்க்கை குறித்து யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் அவர் 1970களின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் டிரக் ஓட்டுநராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 4 ஆண்டுகள் அவர் பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டில் 1988இல் அவர் ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த காலகட்டத்திலேயே அவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். 1986இல் கார் ஒன்றையும் 1990இல் பைக், தையல் இயந்திரம், ஸ்கூட்டர் என பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் தொடர்ச்சியாக ஈடுபட்டார். இவை வெவ்வேறு மாவட்டங்களில் அரங்கேறி இருந்தனர். அவற்றில் சில வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டாலும், சில காலத்தில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிவிடுவாராம்.

தலைமறைவு
அப்போது தான் 1992 ஜனவரி மாதம், ஓம் பிரகாஷ் தனது கூட்டாளி உடன் சேர்ந்த பைக்கில் பயணித்த ஒருவரிடம் திருட முயன்றுள்ளார். பைக்கில் வந்த நபர், இவர்களை எதிர்த்துப் போராடிய நிலையில், அவரை குத்தி கொன்றுவிட்டுத் தப்பி உள்ளனர். ஓம் பிரகாஷின் கூட்டாளி இந்த வழக்கில் பிடிப்பட்டுவிட்டு சிறையில் 8 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தார். ஆனால், ஓம் பிரகாஷ் தப்பி விட்டார். அவர் எங்கே உள்ளார் என்றே தெரியவில்லையாம். இதையடுத்து அவர் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்ப்டார். சில காலம் அவரை தேடிய போலீஸ், கிடைக்காததால் அப்படியே விட்டுவிட்டனர்.

தமிழ்நாடு
இப்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை ஓம் பிரகாஷே விளக்கி உள்ளார். அதாவது கொலை நடத்த உடன் போலீசாருக்கு அஞ்சிய அவர், ஹரியானாவில் இருந்து தென் மாநிலங்களுக்குத் தப்பி உள்ளார். முதல் சில மாதங்கள் தமிழகத்திலும், அடுத்துக் கொஞ்சக் காலம் ஆந்திராவிலும் அவர் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் கோயில்களில் தஞ்சம் புகுந்த ஓம் பிரகாஷ், கொஞ்சக் காலம் தண்ணீர் லாரி டிரைவராகவும் பணியாற்றி உள்ளார்.

மீண்டும்
சுமார் ஓராண்டிற்குப் பின்னர், மீண்டும் வட இந்தியா திரும்பி உள்ளார். இருப்பினும், ஹரியானாவில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல் உத்தரப் பிரதேசம் காசியாபாத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவர் லாரி ஓட்டுநராக இருந்துள்ளனர். 1990களில் அங்கு சிறியி டிவிடி கடை வைத்த அவர், திரைப்படங்களின் சிடிக்களை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 1997இல் இதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தையும் கூட பிறந்து உள்ளது. மேலும், கடந்த 2007 முதல் சில குறைந்த பட்ஜெட் படங்களிலும் கூட அவர் வில்லன், போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

ஏமாற்றிவிட்டார்
ஓம் பிரகாஷின் இந்த புதிய குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் அவரது குற்றங்கள் குறித்து எதுவும் தெரியாது. இது தொடர்பாக அவரது மனைவி ராஜ்குமாரி கூறுகையில், "திருமணத்திற்குப் பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவரது சொந்த கிரமமான நரெய்னாவுக்கு அவர் கூட்டிச் சென்றார். தனது சகோதரர் மற்றும் குடும்பத்தினரை நண்பர்கள் என்று கூறி அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதே அவர் எதையோ மறைக்கிறார் என நினைத்தேன். சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது முதல் மனைவி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் வீட்டின் முன் வந்து சண்டையிட்டார். அப்போது தான், எங்களுக்கு அவரது முதல் திருமணம் பற்றியே தெரிந்தது. அவருக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் இருந்துள்ளனர்.

சிக்கியது எப்படி
கடந்த 2020இல் ஹரியானா அரசு சிறப்பு படை ஒன்றை அமைத்தது. போதைப் பொருள், பயங்கரவாதம் உள்ளிட்ட வழக்குகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருக்கும் அவரது பைலை மீண்டும் போலீசார் திறந்துள்ளனர். அவரை மோஸ்ட் வான்டட் கிரமினலாகவும் அறிவித்தனர். எல்லா ஆவணங்களையும் புதிதாகப் பெற்ற ஓம் பிரகாஷ் ஒரு முக்கிய தப்பைச் செய்துவிட்டார். அதாவது தனது புதிய ஆவணங்கள் அனைத்திலும் அவருடைய பெயரையும் அவரது தந்தை பெயரையும் மாற்றாமல் உண்மையான பெயரையே கொடுத்துவிட்டார். இது தான் அவர் பிடிபட முக்கிய காரணமாக இருந்தது. இதை வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவரது மொபைல் எண்ணை கண்டுபிடித்து இருப்பிடத்தையும் கண்டுபிடித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications