பழையன கழிதலும்..புதியன புகுதலும்! வருகிறது புதிய வருமான வரி மசோதா.. ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை
டெல்லி: கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த நிலையில் புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கடந்த 1ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது எனக் கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா.
பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2023ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு தற்போது 12 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய வருமான வரி சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் தாக்கல் செய்யப்படும் என மதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வருமான வரி சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவுக்கு மதிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கும், நீண்ட வாக்கியங்களாக விளக்கங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடக்கிறது. அதற்கு பிறகு மார்ச் 10ஆம் தேதி நாடாளுமன்றம் கூடி ஏப்ரல் நான்காம் தேதி வரை நடக்கவிருக்கிறது. எனவே தற்போது நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications