அரபு நாடுகளில் போர் நடந்தாலும்.. இனி இந்தியாவில் பெட்ரோல் விலை உயராது! ஜாக்பாட் அடிச்சிருக்கு மக்களே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றிற்கு இந்தியா அரபு நாடுகளைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் எழுந்திருக்கிறது. இது இந்தியாவை பாதிக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியெனில் நமக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது மக்களே.

crude oil Israel Iran

அதாவது அந்தமான் கடலில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹர்தீப் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார். அதில், "கயானாவில் Hess Corporation மற்றும் CNOOC நிறுவனங்கள் கண்டுபிடித்ததைப் போன்ற ஒரு பெரிய எண்ணெய் வளம் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கண்டுபிடிப்பதற்கு அதிக காலம் ஆகாது என்று நான் நம்புகிறேன். எங்கள் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் 3.7 டிரில்லியன் டாலரிலிருந்து 20 டிரில்லியன் டாலராக மாறும்" என்று கூறியுள்ளார்.

அந்தமான் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டால், அது நமக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும். ஏனெனில், தற்போது வரை சுமார் 85 முதல் 88 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்துதான் நாம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து தேவையை பூர்த்தி செய்துக்கொள்கிறோம். மீதமுள்ள 15-12 சதவிகிதம், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணையை கொண்டு சமாளித்துக்கொள்கிறோம்.

அதாவது, அசாம், குஜராத், ராஜஸ்தான், மும்பை, கிருஷ்ணா-கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் நமக்கு கிடைக்கிறது. இந்தியாவில் முதன்முதலில் 1889ல் அசாம் மாநிலத்தின் 'டிக்பாயில்' எனும் பகுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அசாம் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்குப் பகுதி முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதியாக இருக்கிறது. அதேபோல, குஜராத்தின் காம்பே வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. அங்கலேஷ்வர், காம்பட், அகமதாபாத்-கலோல் போன்ற இடங்களில் எண்ணெய் வயல்கள் உள்ளன.

இந்தியாவில் மிகப்பெரிய எண்ணெய் வயல் அமைந்துள்ள பகுதி 'மும்பை ஹை' (Western Offshore) ஆகும். 'மும்பை ஹை' என்பது மும்பை நகரம் கிடையாது. மும்பை நகரத்திலிருந்து மேற்கு திசையில், அரபிக் கடலில் அமைந்துள்ள ஒரு எண்ணெய் வயலுக்கு 'மும்பை ஹை' என்று பெயர். 1974ல் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் கணிசமான பங்கை இது கொண்டுள்ளது.

சமீபகாலமாக ராஜஸ்தானிலும் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. பார்மர் பகுதியில் மங்களா, சரஸ்வதி, ராஜேஸ்வரி போன்ற முக்கியமான எண்ணெய் வயல்கள் கண்டறியப்பட்டுள்ளன. தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டால், ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே வங்காள விரிகுடாவில் உள்ள ஆழமான கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் பி.பி (Reliance BP) போன்ற நிறுவனங்கள் இங்கு எண்ணெய் உற்பத்தி செய்கின்றன.

தழிழ்நாட்டை பொறுத்த அளவில், காவேரி ஆற்றின் படுகையிலும், கடற்கரைப் பகுதிகளிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு படிமங்கள் உள்ளன. நரிமனம், கோவில்பல் போன்ற இடங்களில் எண்ணெய் வயல்கள் உள்ளன. இது தவிர அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்திலும் கச்சா எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சேர்ந்தாலும் இந்தியாவின் மொத்த எண்ணெய் தேவையில் இவை 12-15% வரைதான் பங்களிக்கின்றன.

இப்படி இருக்கையில், அந்தமான் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்தியாவிற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+