‘ஏன் இந்த விஷம அரசியல்’ - ராகுல் காந்தியை விமர்சித்து கடிதம் எழுதிய 272 விவிஐபிகள்
டெல்லி: மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி, எதிர்க்கட்சிகளை வலுவிழக்க செய்து ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எஸ்ஐஆர் விவகாரம், பீகார் தேர்தல் முடிவுகளிலும் அந்தக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 272 பேர் ராகுல் காந்தியை விமர்சித்து அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடே உற்று நோக்கிய பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை குற்றம் சாட்டினார்கள்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பீகாரில் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்தப் பணியில் சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தற்போது பீகாரை போலவே வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டிலும் நடைபெற்று வருகின்றன.
இதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். போராட்டத்திலும் ஈடுபட்டனர். தேசியளவில் இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அதிகம் விமர்சித்து வருகிறார். அவரின் தொடர் குற்றச்சாட்டுகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
272 முக்கியஸ்தர்கள் கடினம்
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 16 பேர், ஆயுதப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 133 பேர், பல்வேறு பதவிகளில் அதிகாரத்துடன் இருந்த 123 பேர் உள்ளிட்ட 272 பேர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி எஸ்பி வைட், ரா அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிப்பாதி உள்ளிட்டோர் இணைந்து கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
'இந்திய அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்' என்கிற தலைப்பில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் அவர்கள், "நாங்கள் இந்த சமூகத்தின் மூத்த குடிமக்கள். அரசியல் கட்சி தலைவர்களின் விஷமத்தனமான அரசியலால் இந்திய அரசியலமைப்பு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தில் இருக்கிறது.
ஒருமைப்பாடு மீது தாக்குதல்
அரசியல் கட்சி தலைவர்கள் ஆக்கபூர்வமான கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்காமல், ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகள் மீது குற்றம்சாட்டிவிட்டு இப்போது தேர்தல் ஆணையத்தின் மீது புகார் சொல்லி, இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் நற்பெயர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர் மீது கடுமையான விமர்சனங்களை சொல்லி அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ராகுல் காந்தி கூறி வருகிறார். குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அதற்காக அவர் எந்த புகாரையும் கொடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் பி டீம் போல செயல்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
தேர்தல் தோல்வி விரக்தி
எஸ்ஐஆர் குறித்து தேர்தல் ஆணையம் முறையாகவும், தெளிவாகவும் விளக்கமளித்த பிறகும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது அடிப்படை ஆதாரமற்றது. தேர்தல் தோல்வி விரக்தியால் காங்கிரஸ் கட்சியினர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் மக்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்பதையே காட்டுகிறது.
மக்களிடம் தங்களின் நம்பத்தன்மையை இழந்துவிட்டதால் இப்படி அரசமைப்பின் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். தேர்தல்களில் அவர்களுக்கு சாதகமான முடிவுகள் வரும் இடத்தில் அமைதியாகவும், எதிராக முடிவு வரும் இடங்களில் தேர்தல் ஆணையம் வில்லனாகவும் தெரிகிறது என்றால் தவறு யாருடையது." என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications