இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. பலி 239ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது. (6565 சிகிச்சையில் உள்ள நோயாளிகள்). இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இதுவரை 643 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நேற்று மாலை நிலவரப்படி 206ஆக இருந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை, இன்று காலை 239 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1588, டெல்லியில் 898 நோயாளிகள் உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், கொரோனா நோய் தடுப்பு மற்றும் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையான இன்று, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். பல முக்கிய முடிவுகள் இதில் எட்டப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டுமா என்று முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி முடிவு செய்வார். வேகமாக பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் லாக்டவுன் நீட்டிப்பை ஆதரித்ததையடுத்து, ஏப்ரல் 14 க்கு அப்பால் மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுனை நீட்டிக்கக்கூடும் என்றுதான் தெரிகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications