நாட்டில் வேக்சின் செலுத்தும் வேகம் மிக குறைவு.. மாத இலக்கை எட்ட முடியாமல் தவிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் வெகுவாக குறைந்து விட்டதால், ஜூலை மாதத்துக்கான தடுப்பூசி அளவை பூர்த்தி செய்ய முடியவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி மீதான வதந்தி, தேவையற்ற பயம் காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவில்லை. ஆனால் இப்போது மிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

மக்கள் ஆர்வமாக இருந்தாலும் தடுப்பூசி தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பல மாநிலங்களில் தேவைக்கேற்ப தடுப்பூசி செலுத்தப்படாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இலகை எட்ட முடியவில்லை

இலகை எட்ட முடியவில்லை

ஜூன் 7 அன்று பிரதமர் நரேந்திர மோடி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகம் எடுக்க தொடங்கின. ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த மாத இறுதிக்குள் 13.5 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் இலக்கை பூர்த்தி செய்ய முடியாது என்பது தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மாதத்தில் 9.94 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

 38.26 லட்சம் டோஸ்கள் மட்டுமே

38.26 லட்சம் டோஸ்கள் மட்டுமே

சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 38.26 லட்சம் டோஸ்கள் வழங்கப்படுகின்றன. இதே வேகத்தில் சென்றால் இந்த மாத இறுதிக்குள் 12.5 கோடி டோஸ்கள் மட்டுமே செலுத்த முடியும். 3.5 கோடி டோஸ்கள் என்ற இலக்கை அடைய, தினசரி சுமார் 60 லட்சம் டோஸ் அளவுகளை நிர்வகிக்க வேண்டும். ஆனால் இந்த மாதத்தில் இரண்டு முறை மட்டுமே 60 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெகுவாக குறைவு

வெகுவாக குறைவு

ஜூன் 21 அன்று நாட்டில் 87 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. அப்போதுதான் ஜூலை மாதத்துக்கு 13.5 கோடி டோஸ் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக தடுப்பூசியின் வேகம் ஜூலை மாதத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. ஜூன் 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் 4.5 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டன.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
    புள்ளி விவரங்கள்

    புள்ளி விவரங்கள்

    ஆனால் ஜூலை 25 ஆம் தேதி கணக்குப்படி இந்த வாராந்திர இலக்கு 2.8 கோடியாகக் குறைந்துவிட்டன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு காட்டுகின்றன. இருப்பினும் இது தடுப்பூசி செலுத்த தொடங்கிய நாளில் இருந்து வாரந்தோறும் சராசரியாக 1.51 கோடி என்ற டோஸ்களை அளவுகளை விட அதிகமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    மொத்தம் எத்தனை?

    மொத்தம் எத்தனை?

    நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 44,19,12,395 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. 34 கோடிக்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுள்ளதாக தரவு காட்டுகிறது. அதே வேளையில் 9.3 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 39,361 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியான 49 நாட்களுக்கு தினசரி நேர்மறை(பாசிட்டிவ்) விகிதம் 5%-க்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+